ஓசூரில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் உற்பத்திப் பொருள்கள் மற்றும் ஜாப் ஆர்டர்களுக்கு உரிய நியாயமான விலை நிர்ணயம் செய்யக்கோரி ஜூலை மற்றும் 14 ஆம் தேதிகளில் இரண்டாயிரத்திற்க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஹோஸ்டியா தலைவர் வேல்முருகன் வியாழக்கிழமை செய்தியாளரிடம் கூறியது:
ஒசூரில் இரண்டாயிரத்திருக்கும் மேற்பட்டறு சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் வாகன உதிரி பாகங்கள் மற்றும் இதர பொறியியல் பொருள்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன.
இந்நிறுவனங்கள், சுமார் 1,03,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை அளிகிறது. குறிப்பாக படித்த மற்றும் படிக்காத கிராமப்புற இளைஞர்கள். பெண்கள், மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் போன்று அனைத்து தரப்பினருக்கும்
பணிகளை அளித்து அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக உள்ளது.
மேலும், தொழில் முனையும் இளைஞர்களுக்கு ஒரு நம்பிக்கை தரும் முன்மாதிரியாக சிறு, குறு நடுத்தர தொழில் முனைவோர்கள் விளங்குகின்றனர். இத்துறையின் வளர்ச்சி அல்லது வீழ்ச்சி சமூகத்தின் பல நிலைகளில் உள்ள மக்களின் வாழ்வில் நேரடியாக. பிரதிபளிக்கும்.
தற்போது, இந்நிறுவனங்கள் கடும் சவாலான சூழ்நிலையை சந்தித்து வருகிறது. கடந்த 15 ஆண்டுகளாக உற்பத்தி செலவு பன்மடங்கு பெருகி உள்ளது.
இதையும் படிக்க | மகாராஷ்டிரத்தின் அடுத்த முதல்வர் இவரா..?
குறிப்பாக, இயந்திரங்கள், தொழிற்சாலைக்கான இடம், கட்டுமான செலவு விலை. தொழிலாளர்களின் ஊதியம், எரிபொருளின் விலை, மூலப்பொருள்களின் விலை, மற்றும் பராமரிப்பு செலவு, மின்சார கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.
ஏற்கனவே, நெருக்கடி கரோனா பொதுமுடக்கம் போன்றவற்றினால் சுமார் 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள். கடும் நஷ்டத்தை சந்தித்து மூடப்பட்டுள்ளது. எனவே, பெரிய தொழில் நிறுவனங்கள் குறு, சிறு நிறுவனங்கள் செய்து தரும் ஜாப் ஒர்க்கிற்கு நியாயமான விலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஜூலை 13 14 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தம் செய்யப் போவதாகவும், இதனால் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் மூடப்படுவதால் ரூ.500 கோடி உற்பத்தி பாதிக்கப்படும் எனக் கூறினார்.
இந்தப் பேட்டியின்போது இணைத் தலைவர் மூர்த்தி பொருளாளர் ஸ்ரீதரன், செயலாளர் வடிவேலு முன்னாள் தலைவர் ஞானசேகரன் மற்றும் சங்க உறுப்பினர்கள் உடனிருந்தனர்.