
சென்னையில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கியதில் 2 பேர் பலியாகினர்.
சென்னை பெருங்குடி காமராஜர் நகரில்(கிரீன் ஏக்கர்ஸ்) தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் கழிவுநீரை நல்ல நீராக மாற்றுவதற்காக கடந்த 5 ஆண்டுகளாக பொறியியல் பட்டதாரியான சரவணன் குத்தகைக்கு எடுத்துள்ளார்.
இந்நிலையில், புதன்கிழமை மாலை சுமார் 20 ஆடி ஆழமுள்ள கழிவுநீர்த் தொட்டியை சென்னை ஆவடியைச் சேர்ந்த பெரியசாமி(38), திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி(38) ஆகிய இருவரும் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டபோது, விஷவாயு கசிவால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனா்.
இதையும் படிக்க | அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரிய வழக்கு: விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு
இதையடுத்து அவர்கள் இருவரையும் மீட்டனர். அதில், பெரியசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிருக்குப் போராடிய நிலையில் தட்சிணாமூர்த்தியை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறிது நேரத்திலே தட்சிணாமூர்த்தியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த துரைப்பாக்கம் போலீசார் இருவரின் உடலையும் கைப்பற்றி சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...