தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து இன்று வெளியிட்ட அறிக்கையில்,

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல கீழடிக்குச் சுழற்சியின் காரணமாக, 

07.03.22: தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

08.03.22: தென் தமிழகம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

09.03.22 முதல் 11.03.22 வரை:  தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 

சென்னையை பொறுத்தவரை

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். 

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டி மீட்டரில்)

மயிலாடுதுறை, சீர்காழி தலா 5, மதுக்கூர், சிதம்பரம் தலா 4, அதிராமபட்டினம், நெய்வாசல் தென்பாதி, அண்ணாமலை நகர், திருத்துறைப்பூண்டி, காரைக்கால், வேளாங்கண்ணி தலா 3, நீடாமங்கலம், நாகப்பட்டினம், புவனகிரி, பரங்கிப்பேட்டை, மஞ்சளாறு, திருவாரூர், திருவிடைமருதூர், ஒரத்தநாடு, கடலூர் தலா 2, திருப்பூண்டி, மரக்காணம், மகாபலிபுரம், காட்டுமன்னார் கோயில், நன்னிலம், வலங்கைமான், பெருஞ்சாணி அணை, புதுச்சேரி, பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, பட்டுக்கோட்டை, வனமாதேவி, புத்தனார் அணை தலா 1 செ.மீ மழையும் பெய்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com