
தமிழகத்தின் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக் கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வியாழன், வெள்ளி ஆகிய நாள்களில் வட வானிலையே நிலவும். சென்னையைப் பொருத்தவரை வியாழக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.