தாயின் கனிவைக் கொண்ட பட்ஜெட்: முதல்வர் ஸ்டாலின்

தமிழக பட்ஜெட் தாயின் கனிவு, ஆசிரியரின் அக்கறை, சீர்திருத்தவாதியின் மானுட பற்று கொண்டது என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தாயின் கனிவைக் கொண்ட பட்ஜெட்: முதல்வர் ஸ்டாலின்

தமிழக பட்ஜெட் தாயின் கனிவு, ஆசிரியரின் அக்கறை, சீர்திருத்தவாதியின் மானுட பற்று கொண்டது என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப் பேரவையில் இன்று,  2022 - 23ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

இன்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில், தமிழகத்தின் பொருளாதார நிலை மற்றும் வருவாய் நிலை குறித்து தெரிவித்ததுடன் சில புதிய திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை நிதியமைய்ச்சர் தெரிவித்தார்.

இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழக பட்ஜெட் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர், தாயின் கனிவு, ஆசிரியரின் அக்கறை, சீர்திருத்தவாதியின் மானுட பற்றைக் கொண்ட நிதிநிலை அறிக்கை. தமிழக மேம்பாட்டுக்கு முன்னோட்டமான கொள்கை அறிக்கையாக பட்ஜெட் அமைந்துள்ளது. நிதி நெருக்கடி இருந்தாலும் சமாளித்து நிதிநிலை அறிக்கையை தயார் செய்தோம். திராவிட மாடல் பாணி தொடரும் என்பதை இந்த நிதிநிலை அறிக்கை உணர்த்துகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com