
கோப்புப்படம்
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை உயர்வுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவருமான கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நவ. 3-ஆம் தேதி பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.5, டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதனைத் தொடா்ந்து, நவ. 4-ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. அண்மையில் உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா, மணிப்பூா் மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்றது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை எனக் கூறப்பட்டது.
தோ்தல் முடிவுகள் வெளியாகி கிட்டத்தட்ட 2 வாரங்களாகியுள்ள நிலையில், அரசுக்குச் சொந்தமான எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை செவ்வாய்க்கிழமை லிட்டருக்கு 80 காசுகள் அதிகரித்தது.
இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக, பெட்ரோல், டீசல் விலையை முறையே லிட்டருக்கு 80 காசுகள் அதிகரித்துள்ளது எண்ணெய் நிறுவனங்கள்.
அதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.91 ஆகவும், டீசல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் டீசல் ரூ.92.95 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவருமான கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில்,
தேர்தல்கள் முடிந்தன. இதோ பசுத்தோல் உதிர்ந்துவிட்டது. பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வு தொடங்கிவிட்டது. கச்சா எண்ணெய் விலை உயர்வு என்பார்கள். ஆனால் அது கீழே இறங்கியபோதும் விலையைக் குறைக்கவில்லை இவர்கள். அதில் சேர்த்த லட்சம் கோடிகளை வைத்து இப்போது சரிக்கட்டலாமே... என்று கூறியுள்ளார்.
இதையும் படிக்க | நாட்டில் புதிதாக 1,778 பேருக்குத் தொற்று: 2,542 பேர் குணமடைந்தனர்
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...