பட்ஜெட்டில் சாமானியர்களுக்கு நிவாரணம் இல்லை: கே.அண்ணாமலை

தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் மக்களை ஏமாற்றும் விதமாக அமைந்துள்ளதாக பாஜக விமர்சித்துள்ளது.
பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை  (கோப்புப்படம்).
பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை (கோப்புப்படம்).

தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் மக்களை ஏமாற்றும் விதமாக அமைந்துள்ளதாக பாஜக விமர்சித்துள்ளது. தமிழக பட்ஜெட்டை கண்டித்து சென்னையில் இன்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது:

சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மானியம் அறிவிக்காததால், 2022 - 23-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் சாமானியர்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை இன்று தெரிவித்துள்ளார். 

தாலிக்கு தங்கம் திட்டத்தை ரத்து செய்துள்ளார்கள். அந்த திட்டத்தில் ரூ.65 ஆயிரம் முதல் ரூ.90 ஆயிரம் வரை பெண்கள் பலன் அடைவார்கள். அதை ரத்து செய்துவிட்டு உயர் கல்விக்கு ரூ.36 ஆயிரம் ஒதுக்கீடு செய்துள்ளார்கள் என்றார்.

பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ. 36,895 கோடி ஒதுக்கப்பட்டாலும், அதில் 84% அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான குறைவான தொகையாக உள்ளது

தமிழகத்தின் அனைத்து மத்திய அரசின் திட்டங்களையும் செயல்படுத்துவதில், மத்திய அரசுடன் ஏன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கைகோர்க்கக் கூடாது என்று கேள்வி எழுப்பினார்.

மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தினால் தமிழகத்திற்கு தனி பட்ஜெட் தேவையில்லை என அண்ணாமலை கூறினார்.

மேலும், கும்பாபிஷேகம் மற்றும் கோயில்களை புனரமைக்க ரூ.1,000 கோடி அறிவித்தது, இந்து மக்களுக்கு பாசத்தை காட்ட ஆளும் திமுக முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com