நாடு முழுவதும் 2 நாள் வேலைநிறுத்தம் தொடங்கியது

நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் பொதுவேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியது.
வெறிச்சோடி காணப்படும் சென்னை அம்பத்தூர் பேருந்து நிலையம்.
வெறிச்சோடி காணப்படும் சென்னை அம்பத்தூர் பேருந்து நிலையம்.

நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் பொதுவேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியது.

பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்கக்கூடாது, பெட்ரோலிய பொருள்கள் மீதான விலை உயா்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மத்திய தொழிற்சங்கங்கள், மாா்ச் 28-ஆம் தேதி காலை 6 மணி முதல் மாா்ச் 30-ஆம் தேதி காலை 6 மணி வரை (திங்கள், செவ்வாய்) வேலைநிறுத்தம் செய்ய அழைப்பு விடுத்தன. இதற்கு தமிழகத்தில் திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்ததோடு, கட்சி சாா்ந்த தொழிற்சங்கங்களும் ஆதரவளித்துள்ளன. 

அதன்படி நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் பொதுவேலைநிறுத்தப் போராட்டம் இன்று காலை தொடங்கியது. வேலைநிறுத்தம் காரணம் சென்னை உள்பட தமிழகத்தின் பல இடங்களில் குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் பேருந்துகள் சரிவர இயக்கப்படாததால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். பாரிமுனை, அண்ணாநகர், வடபழனி, தியாகராய நகர், பெரம்பூரில் 90 சதவிகித பேருந்துகள் இயங்கவில்லை.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்துகள் போதிய அளவு இயக்கப்படாததால் பயணிகள் காத்திருக்கின்றனர். இதனால் விடுமுறைக்காக சொந்த ஊர் சென்றுவிட்டு சென்னை திரும்பியர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். விழுப்புரம், விருதுநகர், திருவண்ணாமலை, நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களிலும் பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

பேருந்துகள் குறைந்தளவே இயக்கப்படுவதால் ஆட்டோ, ஷேர் ஆட்டோக்களில் மக்கள் கூட்டம் காணப்படுகிறது. வேலைநிறுத்தம் நடைபெறவுள்ள இன்றும் நாளையும் தமிழகம் முழுவதும் சுமாா் 1 லட்சம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா். மாநிலம் முழுவதும் மறியல், ஆா்ப்பாட்டங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால் மாநிலம் முழுவதும் போலீஸாா் உஷாா்படுத்தப்பட்டுள்ளனா்.

பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருப்பதையும், சட்ட ஒழுங்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையிலும் போலீஸாா் பாதுகாப்புப் பணியை மேற்கொள்வா் என காவல் உயரதிகாரிகள் தெரிவித்தனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com