மக்கள் பயன்பாட்டில் நெடுஞ்சாலைத் துறை மிகவும் முக்கியமானது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நெடுஞ்சாலைத் துறை பவள விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு வசதியில் நெடுஞ்சாலைத் துறைக்கு முக்கியப் பங்கு உள்ளதாகக் கூறினார்.
மக்கள் பயன்பாட்டில் மிகவும் முக்கியமானது நெடுஞ்சாலைத் துறை. 1972ஆம் ஆண்டு கிராமங்களுக்கு இணைப்புச் சாலை அமைக்கும் திட்டம் திமுகவால் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன் பிறகு ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட கிராமங்கள் அனைத்துக்கும் இணைப்புச் சாலை அமைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சி காலத்தில் அதிக மேம்பாலங்கள் கட்டப்பட்டன. அண்ணா மேம்பாலம் நாட்டின் சிறந்த மேம்பாலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. தமிழகத்தில் ஒரே வீச்சில் 1997ஆம் ஆண்டு 302 கோடி ரூபாயில் 106 மேம்பாலங்கள் கட்டப்பட்டன. இவை அனைத்தும் 2 ஆண்டுகளில் முடிக்கப்பட்டது இன்றும் ஆச்சரியமாக உள்ளது.
நெடுஞ்சாலைத் துறை பணியில் சுணக்கம் ஏற்படக்கூடாது என்பதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!
போர்க் கூட்டணி? பாக். ராணுவத் தலைமைத் தளபதியுடன் சௌதி பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு!

லக்ஷ்மி பிராண்ட்டின் தீபாவளி பரிசு போட்டி : நியூ ஜெர்சியை சேர்ந்தவருக்கு லெக்ஸஸ் RX 350 கார் பரிசு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சராக அசோக் லேலண்ட் ஒப்பந்தம்!
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

