சேலம் மாவட்டத்தில் சூறைக் காற்றுடன் கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சேலம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலை சூறைக் காற்றுடன் பெய்த கன மழையால் பல்வேறு பகுதிகளில் மரம் முறிந்து விழுந்ததில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் துண்டிப்பு
சேலத்தில் செவ்வாய்க்கிழமை மாலை சூறைக் காற்றுடன் பெய்த கன மழையில் சாலையில் பெருக்கெடுத்து ஏடும் மழை நீர்.
சேலத்தில் செவ்வாய்க்கிழமை மாலை சூறைக் காற்றுடன் பெய்த கன மழையில் சாலையில் பெருக்கெடுத்து ஏடும் மழை நீர்.


சேலம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலை சூறைக் காற்றுடன் பெய்த கன மழையால் பல்வேறு பகுதிகளில் மரம் முறிந்து விழுந்ததில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் துண்டிப்பு ஏற்பட்டு இருளில் மூழ்கியது. இதனால் பொதுமக்கள், தேர்வுக்காக படிக்கும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அவ்வப்போது கோடைகாலத்திலும் மழை பெய்து வருகிறது. இதன் அடிப்படையில் சேலம் மாவட்டத்தில் பரவலாக கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மாலை நேரத்தில் பெய்யும் மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர் காற்று வீச தொடங்கியது. 

இந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மழை வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டது. சிறிது நேரத்தில் பலத்த காற்று வீச தொடங்கியது. தொடர்ந்து இடி மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. சுமார் ஒரு மணிநேரம் வெளுத்து வாங்கிய மழையின் காரணமாக ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்தது.

சூரமங்கலம் ஐந்து ரோடு புதிய பேருந்து நிலையம் அஸ்தம்பட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் கடைவீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்ததின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் புகுந்ததால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

மேலும் ஆங்காங்கே மரங்கள் முறித்து விழுந்ததால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் மின் பாதை பழுதடைந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சுமார் 2 மணிநேரம் சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருளில் மூழ்கியது. இதனால் பொதுமக்கள், தேர்வுக்காக படிக்கும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

தாழ்வான பகுதியில் தேங்கியிருக்கும் தண்ணீரை வெளியேற்றும் பணியிலும், சாலைகளில் விழுந்து கிடக்கும் மரங்களை அகற்றும் பணியிலும் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

காலையிலிருந்து கொளுத்தும் வெயிலின் தாக்கத்திலிருந்த மக்களுக்கு மாலை பெய்த மழை ஆறுதல் அளித்து தற்போது குளிர் காற்று வீசத் தொடங்கியுள்ளது.

இருப்பினும், தாழ்வான பகுதிகளில் பல்வேறு இடங்களில் உள்ள மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com