திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனைகனடா பிரதமா் இன்று இந்தியா வருகை :பிரதமா் மோடியுடன் பேச்சு நடத்துகிறாா்சென்னை பல்கலை. பட்டப்படிப்பு தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுசட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை2026-27 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 7.2% வரை உயரும் : ‘இஒய்’ நிறுவனம் கணிப்புகடலோர, மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
/

தஞ்சாவூர்: ஷவர்மா சாப்பிட்ட கல்லூரி மாணவர்கள் 3 பேருக்கு வாந்தி, மயக்கம்

தஞ்சாவூர் அருகே துரித உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட கல்லூரி மாணவர்கள்  3 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:10 am

DIN


தஞ்சாவூர் அருகே துரித உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட கல்லூரி மாணவர்கள்  3 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் புதியதாக திறக்கப்பட்ட துரித உணவகத்தில் கால்நடை மருத்துவ மாணவர்களான பிரவீன்(22), பரிமலேஸ்வரன்(21), மணிகண்டன்(21) ஆகிய 3 பேரும் ஷவர்மா சாப்பிட்டுள்ளனர். 

பின்னர் இவர்களுக்கு உணவு ஒவ்வாமையால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கடந்த 2 ஆம் தேதி கேரளம் மாநிலம், காசர்கோடு மாவட்டம் செருவத்தூர் நகரில் உள்ள துரித உணவுக் கடை ஒன்றில் "கெட்டுப்போனா ஷவர்மா" சாப்பிட்ட 17 வயது பள்ளி மாணவி உயிரிழந்தார், மேலும் 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.