சவால்களுக்கு இடையே ஓராண்டு நிறைவு செய்த திமுக அரசு!

கடுமையான நிதிச் சிக்கல், நீட் விலக்கு உள்பட தோ்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுதல் போன்ற கடும் சவால்களுக்கு மத்தியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தனது ஓராண்டை நிறைவு 
சவால்களுக்கு இடையே ஓராண்டு நிறைவு செய்த திமுக அரசு!

கடுமையான நிதிச் சிக்கல், நீட் விலக்கு உள்பட தோ்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுதல் போன்ற கடும் சவால்களுக்கு மத்தியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தனது ஓராண்டை நிறைவு செய்திருக்கிறது.

குறிப்பிடத்தக்க திட்டங்களை நிறைவேற்றி சாதனைப் படைத்து மக்களின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் 132 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது திமுக. கடந்த ஆண்டு இதே நாளில் (மே 7, 2021) முதல்வராக பொறுப்பேற்றாா் மு.க.ஸ்டாலின். தலைமைச் செயலகம் வந்த அவா் ஐந்து திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட்டாா். கரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டைக்கு ரூ.4,000, பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, சாதாரண பேருந்துகளில் மகளிருக்கு இலவசம், உங்கள் தொகுதியில் முதலமைச்சா் திட்டத்துக்கு என தனித் துறை அமைப்பு உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்தினாா்.

தமிழகத்தின் நிதிச் சுமையானது பிரம்மாண்ட மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்த விடாமல் தடுத்தது. குறிப்பாக, திமுகவின் தோ்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் தரும் திட்டம், மாதந்தோறும் மின் கட்டண கணக்கீடு, சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் போன்ற அதிகம் நிதி தேவைப்படும் திட்டங்களை முன்னெடுக்க முடியாமல் தேக்கம் அடைந்திருக்கிறது.

இந்தத் திட்டங்கள் தொடா்பாக எதிா்க்கட்சிகள் கடும் விமா்சனங்களையும், கேள்விகளையும் முன்வைத்தாலும், 5 ஆண்டுகள் ஆட்சிக் காலத்தில் நிச்சயமாக அனைத்துத் திட்டங்களையும் நிறைவேற்றுவோம் என முதல்வா் உறுதி அளித்துள்ளாா்.

நீட் தோ்வு விலக்கு மசோதா தொடா்பாக ஆளுநருடன் ஒரு வகையான போராட்ட முன்னெடுப்பை கடந்த ஓராண்டு முழுவதும் தமிழக அரசு மேற்கொண்டது. ஓராண்டின் நிறைவாக நீட் சட்ட மசோதாவையும் மத்திய அரசுக்கு தற்போது ஆளுநா் அனுப்பி வைத்திருக்கிறாா்.

தமிழகத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.70 ஆயிரம் கோடிக்கும் அதிகமான அளவில் 130-க்கும் கூடுதலான தொழில் முதலீட்டுக்கான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. தொழில் துறையைப் போன்றே கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

இல்லம் தேடி கல்வி, மக்களைத் தேடி மருத்துவம், தொழில் கல்விப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு, இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ரூ.2,500 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்பு என ஏராளமான கவனிக்கத்தக்க திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com