ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

2,500 புதிய பேருந்துகள் வாங்க திட்டம்: அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு 2,000 புதிய பேருந்துகளும், 500 பேட்டரி பொருத்திய பேருந்துகளும் வாங்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

News image

புதிய வழித்தடத்தில் பேருந்துகளை தொடக்கி வைத்து பயணிக்கும் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர்.

Updated On :16 மே 2022, 9:12 am

பெரம்பலூர்:  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு 2,000 புதிய பேருந்துகளும், 500 பேட்டரி பொருத்திய பேருந்துகளும் வாங்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

அரியலூர்- வேப்பூர், அகரம் சிகூர்- குன்னம் ஆகிய வழித்தடங்களில் பேருந்துகளை திங்கள்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்த அமைச்சர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:

இதையும் படிக்க.. குழந்தையைக் கொன்ற சிறுவன் கைது; விசாரித்த காவலர்களுக்கு பேரதிர்ச்சி

14-ஆவது ஊதியக் குழு பேச்சுவார்த்தை கடந்த 3 ஆண்டுகளாக நடைபெறவில்லை. தற்போது, முதல்வர் தலைமையில் அந்தக் கூட்டம் நடைபெற்றது. வருகிற மழைக்காலங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக பயணம் செய்யும் வகையில் பேருந்துகள் சீரமைக்கப்படும்.

மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழகத்தில் பேருந்துக் கட்டணம் குறைவாகவே உள்ளது. கேரளா - தமிழ்நாடு செய்துகொண்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் அந்தப் பேருந்துகளில் மட்டுமே பேருந்துக் கட்டணம் உயர்வு குறித்து அலுவலர்கள் அறிக்கை அளித்துள்ளனர்.

போக்குவரத்துத் துறை ரூ. 48,500 கோடி நஷ்டத்தில் இயங்கி வருகிறது.

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை சீரழிக்கப்பட்டது. அதுகுறித்து, துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது.

பேருந்துகளில் பெண்கள், சிறுவர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், 2,000 புதிய பேருந்துகளும், 500 பேட்டரியால் இயங்கும் பேருந்துகளும் ஜெர்மனியில் இருந்து வாங்கப்பட உள்ளது என்றார் அமைச்சர் எஸ்.எஸ். சிவங்கர்.

முன்னதாக, புதிய வழித்தடங்களில் இயங்கும் பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்த அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்,  மாவட்ட ஆட்சியர் ப. ஸ்ரீ வெங்கட பிரியா, பெரம்பலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ம.பிரபாகரன், மாவட்ட ஊராட்சித் தலைவர் சி. ராஜேந்திரன் மற்றும் பொதுமக்களுடன் பயணித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.