பேரறிவாளன் வழக்கு கடந்து வந்த பாதை...!

 மே 18, 2022: பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு.
 பேரறிவாளன் வழக்கு கடந்து வந்த பாதை...!

 மே 21, 1991: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் 15 பேர் தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் இரவு 10.20 மணியளவில் மனித வெடிகுண்டு மூலம் படுகொலை.
 ஜூன் 11, 1991: 19 வயதான ஏ.ஜி. பேரறிவாளனை சிபிஐ கைது செய்தது. அவர் மீது தடா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு.
 ஜனவரி 28, 1998: நளினி, பேரறிவாளன் உள்பட 26 குற்றவாளிகளுக்கு தடா நீதிமன்றம் மரண தண்டனை விதிப்பு.
 மே 11, 1999: இந்த வழக்கில் முருகன் (எ) ஸ்ரீஹரன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோரின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
 ஏப்ரல், 2000: தமிழக அமைச்சரவையின் பரிந்துரையின் அடிப்படையில் அப்போதைய தமிழக ஆளுநரால் நளினியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.
 ஏப்ரல் 28, 2000: முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவருக்கு தமிழக அரசு அனுப்பிவைத்தது.
 ஆகஸ்ட் 12, 2011: பதினோரு ஆண்டுகளுக்குப் பிறகு மூவரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்தார். அதைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
 ஆகஸ்ட் 30, 2011: மூவரின் தூக்கு தண்டனையை குறைக்கக் கோரி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அரசில் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்.
 மே 1, 2012: அந்த வழக்கை உச்சநீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம்
 மாற்றியது.
 பிப்ரவரி 18, 2014: பேரறிவாளன் உள்பட மூவரின் தூக்கு தண்டனையையும் ஆயுள் தண்டனையாகக் குறைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு.
 பிப்ரவரி 19, 2014: ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை முடிவு.
 பிப்ரவரி, 2014: ஏழு பேரையும் விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் தடை
 2015: அரசமைப்புச்சட்டப் பிரிவு 161-இன் கீழ் விடுதலை செய்யக் கோரி தமிழக ஆளுநரிடம் பேரறிவாளன் கருணை மனு தாக்கல். பின்னர், ஆளுநரிடம் இருந்து பதில் வராததால் உச்சநீதிமன்றத்தில் அவரது தரப்பில் வழக்கு.
 ஆகஸ்ட், 2017: பேரறிவாளனுக்கு தமிழக அரசு பரோல் வழங்கல்.
 செப்டம்பர் 9, 2018: அப்போதைய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவை 7 குற்றவாளிகளையும் விடுதலை செய்ய ஆளுநருக்குப் பரிந்துரை.
 மார்ச் 9, 2022: பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கல்.
 மே 11, 2022: பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் விசாரணை முடிந்தது.
 மே 18, 2022: பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com