9 முக்கிய ரயில்களின் பகுதி சேவை ரத்து: மாற்றுப் பாதையில் சில ரயில்கள்(முழு விவரம்)

சென்னை ரயில்வே கோட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பல்வேறு ரயில்கள் பகுதி சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
9 முக்கிய ரயில்களின் பகுதி சேவை ரத்து: மாற்றுப் பாதையில் சில ரயில்கள்(முழு விவரம்)

சென்னை ரயில்வே கோட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பல்வேறு ரயில்கள் பகுதி சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

பினாகினி விரைவு ரயில்

விஜயவாடா - சென்னை சென்ட்ரல்(12711) வரும் ரயில் இன்று கூடூருடன் நிறுத்தப்படும்.

சென்னை சென்ட்ரல் - விஜயவாடாவுக்கு(12712) புறப்படும் ரயில் மாலை 4.20-க்கு கூடூரிலிருந்து புறப்படும்.

பல்லவன் விரைவு ரயில்

காரைக்குடியிலிருந்து சென்னை எழும்பூர்(12606) வரும் ரயில் ஜூன் 1ஆம் தேதி செங்கல்பட்டு ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்படும்.

சென்னை விரைவு ரயில்

சென்னை எழும்பூரிலிருந்து மதுரை(12635) புறப்படும் ரயில் ஜூன் 1ஆம் தேதி செங்கல்பட்டிலிருந்து புறப்படும்.

பெங்களூரு விரைவு ரயில்

பெங்களூருவிலிருந்து சென்னை சென்ட்ரல்(12608) வரும் விரைவு ரயில் இன்று, நாளை, மே 31, ஜூன் 1, 7, 8 ஆகிய தேதிகளில் காட்பாடியுடன் நிறுத்தப்படும்.

மைசூரிலிருந்து சென்னை சென்ட்ரல்(12609) வரும் விரைவு ரயில் இன்று, நாளை, மே 31, ஜூன் 1, 7, 8 ஆகிய தேதிகளில் காட்பாடியுடன் நிறுத்தப்படும்.

கோவை விரைவு ரயில்

சென்னையிலிருந்து கோவை(12680) செல்லும் விரைவு ரயில் இன்று, நாளை, மே 31, ஜூன் 1, 7, 8 ஆகிய தேதிகளில் காட்பாடியிலிருந்து காலை 6.15-க்கு புறப்படும்.

கோவை இண்டர்சிட்டி ரயில்

சென்னையிலிருந்து கோவை(12679) செல்லும் விரைவு ரயில் இன்று, நாளை, மே 31, ஜூன் 1, 7, 8 ஆகிய தேதிகளில் காட்பாடியிலிருந்து மாலை 4.20-க்கு புறப்படும்.

தாமதமாக புறப்படும் ரயில்கள்

சென்னை - சாய்நகர் சீரடி செல்லும் விரைவு ரயில்(22601) காலை 10.15-க்கு பதிலாக 2.15 மணிநேரம் தாமதமாக நாளை, ஜூன் 1, 8இல் புறப்படும்.

மாற்றுப்பாதையில் செல்லும் ரயில்கள்

புதுவையிலிருந்து தில்லி செல்லும் ரயில்(22403) ஜூன் 1ஆம் தேதி எழும்பூர், செங்கல்பட்டு, அரக்கோணம் வழியாக செல்லவுள்ளது.

டானாப்பூர் - பெங்களூரு விரைவு ரயில்(12296) மே 29, 30, ஜூன் 5, 6-ல் ரேணிகுண்டா, திருத்தனி வழியாக செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com