தனியார் மயம், புதிய ஓய்வூதியம் திட்டத்திற்கு எதிர்ப்பு: செப்டம்பரில் தில்லியில் பேரணி, ஆர்பாட்டம்

பாதுகாப்புத்துறையில் தனியார் மயம், புதிய ஓய்வூதியம் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற செப்டம்பரில் புது தில்லியில் பேரணி, ஆர்பாட்டம் நடைபெறும்
ஆவடியில் நடந்த அகில இந்திய பாதுகாப்புத் துறை ஊழியர்கள் சம்மேளத்தின் தேசிய செயற்குழு கூட்டத்தில் பேசிய பொதுச்செயலாளர் சி.ஸ்ரீகுமார். உடன், சம்மேளனத்தின்  தலைவர் எஸ்.என்.பாதக் உள்ளிட்டோர்.
ஆவடியில் நடந்த அகில இந்திய பாதுகாப்புத் துறை ஊழியர்கள் சம்மேளத்தின் தேசிய செயற்குழு கூட்டத்தில் பேசிய பொதுச்செயலாளர் சி.ஸ்ரீகுமார். உடன், சம்மேளனத்தின்  தலைவர் எஸ்.என்.பாதக் உள்ளிட்டோர்.

ஆவடி: பாதுகாப்புத்துறையில் தனியார் மயம், புதிய ஓய்வூதியம் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற செப்டம்பரில் புது தில்லியில் பேரணி, ஆர்பாட்டம் நடைபெறும் என ஆவடியில் நடந்த தேசிய செயற்குழு கூட்டத்தில் அகில இந்திய பாதுகாப்புத்துறை ஊழியர்கள் சம்மேளம் அறிவித்துள்ளது.
    
அகில இந்திய பாதுகாப்புத் துறை ஊழியர்கள் சம்மேளத்தின் தேசிய செயற்குழு கூட்டம் ஆவடி படைத்துறையின் உடை தொழிற்சாலை தொழிலாளர்கள் சங்கத்தின் பொன் விழா அரங்கத்தில் இரு நாள்கள் நடந்தது. இதற்கு சம்மேளனத்தின்  தலைவர் எஸ்.என்.பாதக் தலைமை வகித்தார். 

கூட்டத்தில் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் சி.ஸ்ரீகுமார், பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகளும், பாதுகாப்பு ஊழியர்களும்  மத்திய அரசினால் சந்திக்க கூடிய பிரச்னைகள் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையின் மீது இரு நாள்கள் நாட்டின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் இருந்து வந்த பாதுகாப்புத் துறை ஊழியர்களின் பிரதிநிதிகள் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து விவாதங்கள் நடந்தது. இதன் பிறகு, 11 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. 

குறிப்பாக, பாதுகாப்புத்துறையின்கீழ் இருக்கக்கூடிய 41 படைத்துறை தொழிற்சாலைகளை கார்ப்பரேசனாக மாற்றிதை திரும்பப் பெற வேண்டும். இந்த தொழிற்சாலைகளில் மீண்டும் அரசாங்கத்தினுடைய நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவேண்டும். பாதுகாப்புத் துறை ஊழியர்களுக்கு எந்த பலனும் தராத உத்தரவாதம் இல்லாத புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்பப் பெற்று, உத்தரவாதம் உள்ள பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலாக்க வேண்டும். 

பாதுகாப்புத் துறையின்கீழ் இருக்கக்கூடிய கப்பற்படை, ராணுவப் படை, விமானப்படை ஆகிய முப்படை வீரர்கள் இருக்கக் கூடிய  தொழில் நிறுவனங்களை எல்லாம் இழுத்து மூடுவது என்றும், தனியாரிடம் ஒப்படைப்பது என்றும், அது மட்டுமல்லாமல் காலியிடங்களை நிரப்புவது இல்லை என்றும் மத்திய அரசு தவறான முடிவு எடுத்துள்ளது. இந்த முடிவுகளை திரும்ப பெற வேண்டும்.

பாதுகாப்புத் துறை ஊழியர்கள் தொழிற்சங்க உரிமை நசுக்குகின்ற அத்தியாவசிய பராமரிப்பு சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும். இதற்காக தொழிலாளர்கள் ஒன்றுபட்டு போராட வேண்டும். அப்படி மத்திய அரசு இந்த தீர்மானங்கள் கிடைத்துவிட்ட பிறகு, சம்மேளனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைகளைத் தீர்த்து வைக்க முன் வரவில்லை என்றால், வருகின்ற செப்டம்பர் மாதம் புது தில்லியில் மாபெரும் பேரணியும், ஆர்ப்பாட்டமும் நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் ரயில்வே ஊழியர்களையும், தபால்துறை உள்பட மத்திய அரசு ஊழியர்களையும் ஒன்றிணைத்து இந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்று அகில இந்திய பாதுகாப்புத் துறை ஊழியர்கள் சம்மேளனம் தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com