பிரதமரை மதித்திருக்க வேண்டும்: அண்ணாமலை ஆவேசம்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமரை மதித்திருக்க வேண்டும் என்றும் தமிழக அரசியல் வரலாற்றில் கரும்புள்ளியை கொடுத்துவிட்டார் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பிரதமரை மதித்திருக்க வேண்டும்: அண்ணாமலை ஆவேசம்
பிரதமரை மதித்திருக்க வேண்டும்: அண்ணாமலை ஆவேசம்


சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமரை மதித்திருக்க வேண்டும் என்றும் தமிழக அரசியல் வரலாற்றில் கரும்புள்ளியை கொடுத்துவிட்டார் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னையில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற அரசு விழாவில், ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார். நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் பிரதமர் மோடி உரையாற்றினார்.

இவ்விழாவில் முன்னிலை வகித்து உரையாற்றிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நீட் தேர்வு விலக்கு, ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார்.

இந்த நிகழ்ச்சி குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில், நாட்டின் பிரதமராக தான் நரேந்திர மோடி இங்கு வந்தார். பாஜகவின் நிகழ்ச்சிக்காக வரவில்லை. போட்டி அரசியலா? இங்கு நடக்கிறது. நேரு விளையாட்டரங்கத்தில் நடந்தது போட்டி அரசியலா?

பிரதமருக்கு என்று ஒருமரியாதை உள்ளது. எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி எந்த ஆட்சியாக இருந்தாலும் சரி, பிரதமரை மதித்திருக்க வேண்டும். நிச்சயமாக முதல்வர் செய்திருப்பது சரித்திர தவறு.. சரித்திர பிழை. தமிழக அரசியல் வரலாற்றில் கரும்புள்ளியை கொடுத்துவிட்டு முதல்வர் சென்றிருக்கிறார். இதையெல்லாம் மக்கள் கேட்க வேண்டும். இதையெல்லாம் தாண்டி தமிழர்களின் உரிமையை நிலைநாட்ட, பாஜக அரசியலில் நிற்கும்.

முதல்வர் பேசிய ஒவ்வொரு வரிக்கும் ஒவ்வொரு தகவலுக்கும் பதில் கொடுக்கப்படும். கச்சத்தீவை கொடுத்த நீங்கள் எங்களுக்குப் பாடம் எடுக்க வேண்டாம்.

இதனைக் கண்டித்து வரும் 31ஆம் தேதி பாஜக சார்பில்  கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com