வாடிக்கையாளர்களை சில நிமிடங்கள் கோடீஸ்வரர்களாக்கிய எச்.டி.எஃப்.சி.: என்ன நடந்தது?

தியாகராயநகா் எச்.டி.எஃப்.சி வங்கியில் இருந்து 30-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளா்களின் வங்கிக்கணக்கில் ஞாயிற்றுக்கிழமை இரவு அதிகபட்சமாக சுமார் ரூ.13 கோடி அளவுக்கு பணம் வரவு வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட
வாடிக்கையாளர்களை சில நிமிடங்கள் கோடீஸ்வரர்களாக்கிய எச்.டி.எஃப்.சி.: என்ன நடந்தது?
வாடிக்கையாளர்களை சில நிமிடங்கள் கோடீஸ்வரர்களாக்கிய எச்.டி.எஃப்.சி.: என்ன நடந்தது?

தியாகராயநகா் எச்.டி.எஃப்.சி வங்கியில் இருந்து 30-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளா்களின் வங்கிக்கணக்கில் ஞாயிற்றுக்கிழமை இரவு அதிகபட்சமாக சுமார் ரூ.13 கோடி அளவுக்கு பணம் வரவு வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்பது பலரது கனவாக இருக்கும் நிலையில், அதனை எச்டிஎஃப்சி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு சில நிமிடங்களுக்கு நனவாக்கிக் கொடுத்திருக்கிறது. இதற்குக் காரணம் தொழில்நுட்பக் கோளாறு என்கிறது. வாடிக்கையாளர்கள் மனதார அந்த தொழில்நுட்பக் கோளாறுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறார். அவ்வாறு பணம் வரவு வைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளை எல்லாம் முடக்கி, தொழில்நுட்பக் கோளாறை சரி செய்யும் வேலையில் வங்கி ஈடுபட்டது.

பிறகு, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த பிரச்னை ஏற்பட்டதாகவும், பிரச்னை சரிசெய்யப்பட்டு, தவறாக வரவு வைக்கப்பட்ட பணம் திரும்பப்பெறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த ஒரு வாடிக்கையாளர் கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை காலை, தனது வங்கிக் கணக்கில் ரூ.2.2 கோடி பணம் இருப்பதாகக் கூறப்பட்டது. பெட்ரோல் பங்கில் ரூ.1,000-க்கு எரிபொருள் நிரப்பிய பிறகு, தனது செல்லிடப்பேசிக்கு வந்த குறுந்தகவலால் அவர் அதிர்ச்சி அடைந்ததாகவும், உடனடியாக, தனது வங்கிக் கணக்கு வங்கி அதிகாரிகளால் பிளாக் செய்யப்பட்டதாகவும் தகவல் கிடைத்ததாகவும் கூறுகிறார்.

ஒரு தொழிலதிபர், தனது வங்கிக் கணக்கில் ரூ.13 கோடி அளவுக்கு வரவு வைக்கப்பட்டிருப்பதாக வங்கியைத் தொடர்பு கொண்டுள்ளார். 

மற்றொருவரோ, தனது வங்கிக் கணக்கில் ரூ.50 லட்சம் வரவு வைக்கப்பட்டதாக செய்தி வந்தது. பிறகு எனது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டிருந்தது. இதனால், மருத்துவமனையில் இருந்த தன்னால் தனது வங்கி அட்டையைப் பயன்படுத்த முடியாமல் மிகவும் சிரமப்பட்டதாகவும், பல முறை வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொண்டு கேட்ட போதும் சரியாக பதில் கிடைக்கவில்லை என்றும் கூறுகிறார்.

சில நூறுகளை மட்டுமே வங்கிக் கணக்கில் வைத்திருந்த ஒருவாடிக்கையாளர், திடிரென எனது வங்கிக் கணக்கில் ரூ.1.2 கோடி வரவு வைக்கப்பட்டது. பிறகு மீண்டும் அது ரூ.300 ஆகவிட்டது என்கிறார்.

எச்.டி.எஃப்.சி., வங்கியில் மென்பொருள் மேம்படுத்தும் பணி ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் நடைபெற்றது. இதில் நடந்த சில தவறுகள் காரணமாக, தியாகராயநகா் வங்கிக் கிளை வாடிக்கையாளா்கள் பலா் கணக்குகளில் தவறுதலாக பணம் வரவு வைக்கப்பட்டது. 35-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளா்கள் வங்கிக் கணக்குக்கு, வங்கியிலிருந்து சில கோடிகள் வரை வரவு வைக்கப்பட்டது.

இதில், ஒரு தொழிலதிபா் கணக்குக்கு மட்டும், ரூ.13 கோடி வரை வரவு வைக்கப்பட்டிருந்தது. இதர கணக்குகளுக்கு குறைந்த அளவு தொகையே வரவு வைக்கப்பட்டது. பின்னா், இந்த பிரச்னை சரிசெய்யப்பட்டது.

‘இது தொடா்பாக தகவல் கிடைத்தவுடன் பணம் வரவு வைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில், தவறுதலாக வரவு வைக்கப்பட்ட தொகையை வாடிக்கையாளா் எடுக்க முடியாதபடி நிறுத்தினோம். தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு, தவறாக வரவு வைக்கப்பட்ட பணம் திரும்பப் பெறப்பட்டது என்று எச்.டி.எஃப்.சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

மென்பொருள் கோளாறே காரணம் என்று வங்கித் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது. 80 சதவீத கோளாறு சரி செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com