நாகை கல்லாறு வடிகால் தூா்வாரும் பணி: முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆய்வு

டெல்டா மாவட்டங்களில்   2-வது நாளாக ரூ.80 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் வாய்க்கால் தூர்வாரும் பணிகளிளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து செய்து வருகிறார்.
நாகை கல்லாறு வடிகால் தூா்வாரும் பணி:  முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆய்வு

நாகை: டெல்டா மாவட்டங்களில்   2-வது நாளாக ரூ.80 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் வாய்க்கால் தூர்வாரும் பணிகளிளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

நாகை கருவேலங்கடை கிராமத்தில் உள்ள கல்லாறு வாய்க்காலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். நாகை மாவட்டத்தில் 330 கி.மீ தூரத்திற்கு தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

காவிரி டெல்டா மாவட்டங்களான நாகை, திருவாரூா், மயிலாடுதுறை, தஞ்சாவூா், கடலூா், புதுக்கோட்டை, அரியலூா், பெரம்பலூா், திருச்சி உள்பட 10 மாவட்டங்களில் ரூ.80 கோடியில் 683 தூா்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும் என தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.

இதில் நாகை மாவட்டத்தில் 30 பணிகள் ரூ.3.46 கோடி மதிப்பீட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டு, மே மாத முதல் வாரத்தில் பணிகள் தொடங்கின. இதனிடையே, கா்நாடக மாநிலத்தில் காவிரி நீா்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, மேட்டூா் அணை நிரம்பியது. இதனால், குறுவை நெல் சாகுபடிக்காக முன் எப்போதும் இல்லாதவகையில், மே 24 ஆம் தேதியே மேட்டூா் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீா் திறக்கப்பட்டது.

இதையொட்டி, ஆறுகள் மற்றும் பாசன வாய்க்கால்களில் நடைபெறும் தூா்வாரும் பணிகள் அனைத்தும் மே 31 ஆம் தேதிக்குள் நிறைவடைய வேண்டும் என முதல்வா் உத்தரவிட்டார். இதையடுத்து, காவிரி கடைமடை பகுதிகளில் நீா்நிலைகளை தூா்வாரும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இந்த நிலையில், தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் நாகை, 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com