இல.கணேசன் இல்ல விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நடைபெறும் மேற்கு வங்க ஆளுநர் இல. கணேசனின் சகோதரரின் பிறந்தநாள் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். 
மேற்கு வங்க ஆளுநர் இல. கணேசனின் சகோதரரின் பிறந்தநாள் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். 

மேற்கு வங்க ஆளுநர் இல. கணேசனின் மூத்த சகோதரர் இல. கோபாலனின் 80-வது பிறந்தநாள் விழா சென்னை கோடம்பாக்கத்தில் இன்று(வியாழக்கிழமை) நடைபெறுகிறது.

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று மாலை சென்னை வந்தார். நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினையும் அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அதன்படி, இன்று இல. கணேசனின் இல்ல விழாவில் மம்தா பானர்ஜி கலந்துகொண்டுள்ளார். 

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் இந்த விழாவில் பங்கேற்றுள்ளார். அவருடன் திமுக எம்.பி. டி.ஆர். பாலுவும் கலந்துகொண்டார். 

இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்தும் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், பாஜக நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com