பி.இ. துணைக் கலந்தாய்வு எப்போது?

தமிழக பொறியியல் பி.இ./பி.டெக்., மாணவர்கள் சேர்க்கை 2022-23 பொதுக்கலந்தாய்வு முடிவில் நிரப்பப்படாமல் உள்ள இடங்களுக்கு, துணைக்   கலந்தாய்வு விளம்பர அறிவிக்கை (09.11.2022) வெளியிடப்பட உள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்
Published on
Updated on
1 min read

தமிழக பொறியியல் பி.இ./பி.டெக்., மாணவர்கள் சேர்க்கை 2022-23 பொதுக்கலந்தாய்வு முடிவில் நிரப்பப்படாமல் உள்ள இடங்களுக்கு, துணைக்   கலந்தாய்வு விளம்பர அறிவிக்கை (09.11.2022) வெளியிடப்பட உள்ளது.

சிறப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 12 ஆம் வகுப்பு பொது மற்றும் தொழிற்கல்வி பயின்ற, தகுதி வாய்ந்த தமிழகத்தை சார்ந்த மாணவர்கள் மற்றும் பொதுக்கலந்தாய்வில் பங்கேற்க இயலாத மாணவர்களும் இந்த துணைக் கலந்தாய்வில் கலந்து கொண்டு இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், பலவகை தொழில் நுட்பக் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை உள்ளடக்கிய 110 பொறியியல் சேர்க்கை உதவி மையங்களில் மாணவர்களுக்கு இணையதளம் மூலம் பதிவு செய்ய வழிகாட்டுதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் 09.11.2022 அன்று வெளியிடப்பட உள்ள துணைக் கலந்தாய்வு அறிவிக்கையினை தொடர்ந்து, விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக
09.11.2022 - ம் தேதி முதல் 13.11.2022 - ம் தேதி வரை பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கு 5 நாள்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.