தில்லியில் கட்டடத் தொழிலாளர்களை பதிவு செய்வதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த 2018 முதல் 2021 வரை கிட்டத்தட்ட 2 லட்சம் கட்டடத் தொழிலாளர்கள் போலியாக பதிவு செய்துள்ளதாகவும் பாஜக சார்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: 'அப்படியா?’ துணிவு புதிய அப்டேட்: மகிழ்ச்சியில் அஜித் ரசிகர்கள்
இது குறித்து பத்திரிகையாளர்களை சந்தித்த பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியதாவது: தில்லியில் கட்டடத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ளவர்களில் மொத்தமுள்ள 9 லட்சம் பேரில் 2 லட்சம் பேர் போலியாக பதிவு செய்துள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளில் 2 லட்சம் பேர் போலியாக பதிவு செய்துள்ளனர். இந்தப் பதிவுகள் ஆம் ஆத்மி தலைமையிலான அரசினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கட்டடத் தொழிலாளர்கள் பதிவு செய்வதில் ஊழல் நடைபெற்றுள்ளது. போலியாக பதிவு செய்துள்ளவர்களில் 65 ஆயிரம் பேருக்கு ஒரே ஒரு தொலைபேசி எண் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் 2 லட்சம் பேர் போலியாக பதிவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இனிவரும் நாட்களில் மேலும் இது போன்று போலியாக பதிவு செய்தவர்கள் குறித்து நமக்குத் தெரிய வரும் என்றார்.