
கோப்புப்படம்
அனுமதியின்றி கட்டடம் கட்டினால் அதை இடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
அங்கீகாரமின்றி கட்டடம் கட்டலாம், பின்னர் அதிலுள்ள குறைபாடுகளை சரி செய்யலாம் என்பதை ஊக்குவிக்க கூடாது. சட்டவிதிகளை மீறி கட்டடங்கள் கட்டுவது தடையின்றி நடைபெறுகிறது என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி தெரிவித்துள்ளார்.
கட்டடத்தை ஆய்வு செய்து நிறைவு சான்று பெற்றால்தான் மின்சாரம், குடிநீர், கழிவுநீர் இணைப்பு தர வேண்டும் எனவும், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்கள் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை அதிகாரிகள் பின்பற்றவில்லை. அனுமதியின்றி குடியிருப்பு கட்டுயதற்கெதிராக நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: எலான் மஸ்க் வாங்கியிருக்கும் ரூ.643 கோடி மதிப்புள்ள புதிய ஜெட்
அதிகாரிகள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுத்து நவம்பர் 10 ஆம் தேதிக்குள் அறிக்கை தர உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிடப்பட்டுள்ளது.