எவ்வளவு மழை பெய்தாலும் எதிர்கொள்ள தயார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள அரசும், சென்னை மாநகராட்சியும் தயாராக இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள அரசும், சென்னை மாநகராட்சியும் தயாராக இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வடசென்னை பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வுசெய்த பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் தெரிவித்ததாவது:

மழையை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள அரசும், சென்னை மாநகராட்சியும் தயாராக உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மழை, வெள்ளப் பாதிப்பை நாளை ஆய்வு செய்ய உள்ளேன்.  அதிக கனமழை பெய்த சீர்காழியில் நாளை ஆய்வு செய்ய உள்ளேன். இன்று இரவு புறப்பட்டு சென்று,  மயிலாடுதுறை, சீர்காழி, கடலூரில் நாளை ஆய்வு செய்கிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

நீர்நிலை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கொசுவலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வழங்கினார். சென்னையில் மேற்கொள்ளப்பட்ட மழை முன்னெச்சரிக்கை பணிகளை முதல்வர் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், பல்லவன் சாலையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com