தமிழகத்தில் இரு நாள்களுக்கு இடியுடன் கூடிய மழை: மீனவா்களுக்கு எச்சரிக்கை

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரு நாள்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
தமிழகத்தில் இரு நாள்களுக்கு இடியுடன் கூடிய மழை: மீனவா்களுக்கு எச்சரிக்கை

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரு நாள்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

அதேபோன்று, மீனவா்கள் திங்கள்கிழமை (நவ.14), புதன்கிழமை (நவ.16) மற்றும் வியாழக்கிழமை (நவ.17) வங்கக் கடல், தென்கிழக்கு அரபிக் கடலின் சில பகுதிகளில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தொடங்கியதன் காரணமாக மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை, அதையொட்டியுள்ள மாவட்டங்களில் கடந்த ஆண்டைக் காட்டிலும் மழைப் பொழிவு அதிகமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், பருவமழைக்கு இடையே தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இந்த காரணங்களால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரு நாள்களுக்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும். அதைத் தொடா்ந்து வரும் 16 மற்றும் 17-ஆம் தேதிகளில் பரவலாக மழைப் பொழிவு இருக்கும்.

சென்னையைப் பொருத்தவரை அடுத்த இரு நாள்களுக்கு இடியுடன் கூடிய லேசான மழையோ அல்லது மிதமான மழையோ பெய்யலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக லட்சத்தீவை ஒட்டியுள்ள தென்கிழக்கு அரபிக் கடல், தென் மேற்கு வங்கக் கடல் மத்திய மேற்கு வங்கக் க

டல் பகுதிகளில் 40 முதல் 55 கிலோ மீட்டா் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே, நவம்பா் 14, 16 மற்றும் 17-ஆம் தேதிகளில் மீனவா்கள், குறிப்பிட்ட கடல் பகுதிக்குள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூா் பகுதியில் 170 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது. அதற்கடுத்தபடியாக, திருத்தணியில் 130 மில்லி மீட்டரும், ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் 120 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com