நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை: கமல்ஹாசன் தகவல்
சென்னையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் 2024 நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து விவாதித்தாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.


சென்னையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் 2024 நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து விவாதித்தாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா நகரில் இன்று நடைபெற்றது.
இதற்குப் பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த கமல்ஹாசன், 2024 நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து விவாதித்து வருகிறோம், ஆனால் என்னவென்று இப்போது விவரிக்க முடியாது என்று கூறினார். பூத் கமிட்டி அமைப்பது குறித்தும் ஆலோசித்து வருவதாகத் தெரிவித்தார்.
முன்னதாக நிர்வாகிகள் மத்தியில் பேசிய அவர், 'கடந்த முறை செய்த தவறுகளை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் செய்யக் கூடாது. தனித்துப் போட்டியிட்டாலும், கூட்டணி அமைத்தாலும் தேர்தலுக்கான பணிகளை தீவிரமாக செய்ய வேண்டும்' என்று பேசியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...