உலகக் கோப்பை கால்பந்து போட்டி: சட்டவிரோத ஒளிபரப்புக்குத் தடை

உலக கோப்பை கால்பந்து போட்டிகளை சட்ட விரோதமாகப் பதிவு செய்யவும், ஒளிபரப்பவும் 12,000-க்கும் மேற்பட்ட இணையதளங்களுக்கு தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி டிசம்பா் 18-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அரபு நாட்டில் நடக்கும் முதல் உலக கோப்பை போட்டியான இதில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. இந்தப் போட்டிகளை இந்தியா உள்ளிட்ட நாடுகளில் ஒளிபரப்ப உரிமம் பெற்ற ஸ்ண்ஹஸ்ரீா்ம்18 ம்ங்க்ண்ஹ நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. உலக கோப்பைப் போட்டிகளை சட்ட விரோதமாகப் பதிவு செய்து, ஒளிபரப்பும் இணையதளங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என அந்த நிறுவனம் சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மேலும், பெருந்தொகையை முதலீடு செய்து ஒளிபரப்பு உரிமம் பெற்றுள்ளதாக ஸ்ண்ஹஸ்ரீா்ம்18 ம்ங்க்ண்ஹ நிறுவனம் மனுவில் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், உலக கோப்பை கால்பந்து போட்டிகளை சட்ட விரோதமாகப் பதிவு செய்யவும், ஒளிபரப்பவும் 12,000-க்கும் மேற்பட்ட இணையதளங்களுக்கு தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com