7 துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
7 துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேற்கு-வடமேற்கு நோக்கி நகா்ந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது மேற்கு-வடமேற்கு நோக்கி நகரும் வாய்ப்பு அதிகமுள்ளது. மேலும், அடுத்த 48 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடற்கரையை நோக்கிச் செல்லும் வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், ராணிப்பேடை ஆகிய பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் காற்றின் வேகம் திடீரென அதிகரிக்க வாய்ப்புள்ளதால் 3ஆம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com