நிவாரணம் வழங்கக் கோரி சாலை மறியல்: ஒன்றிய பெருந்தலைவரிடம் வாக்குவாதம்!

சீர்காழி வட்டம் உமையாள்பதி கிராமத்தில்  நிவாரணம் வழங்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். ஒன்றிய பெருந்தலைவரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நிவாரணம் வழங்கக் கோரி சாலை மறியல்: ஒன்றிய பெருந்தலைவரிடம் வாக்குவாதம்!

சீர்காழி வட்டம் உமையாள்பதி கிராமத்தில்  நிவாரணம் வழங்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். ஒன்றிய பெருந்தலைவரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்தில் கடந்த 11 ஆம் தேதி கொட்டித் தீர்த்த  அதீத  கனமழையில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்ததுடன், 70ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது.  

குடியிருப்பு பகுதியை சுற்றி தண்ணீர் சூழ்ந்து, குடியிருப்பு பகுதிகள் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட உமையாள்பதி கிராமத்தில் கடந்த 14 ஆம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு சென்ற நிலையில், பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் ரூ 1000 நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. 

மழை ஓய்ந்து 11 நாள்கள் கடந்த நிலையில், பாதிக்கப்பட்ட உமையாள்பதி கிராமத்தில் உள்ள 150 குடும்பங்களுக்கு எவ்வித நிவாரணமும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் அரசு அறிவித்த ஆயிரம் ரூபாய் போதாது, கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என  வலியுறுத்தியும் 200-க்கும் மேற்பட்டோர்  திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

2 மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் நடைபெற்று வரும் நிலையில் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அதனை ஏற்க மறுத்த கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே கலைந்து செல்வோம் எனக் கூறி போராட்டத்தை தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 

இதனால் சீர்காழி மாதானம் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வந்த ஒன்றிய பெருந்தலைவர் ஜெயபிரகாஷிடம் மறியலில் ஈடுபட்டுள்ள மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது தொடர்ந்து வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினர்  பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சாலை மறியல் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com