ஆறு மணி நேரத்தில் வலுவிழக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் என்னவாகும்?

தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 8 மணி நிலவரப்படி ஆறு மணி நேரத்தில் வலுவிழக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
ஆறு மணி நேரத்தில் வலுவிழக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் என்னவாகும்?
ஆறு மணி நேரத்தில் வலுவிழக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் என்னவாகும்?


சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 8 மணி நிலவரப்படி ஆறு மணி நேரத்தில் வலுவிழக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னைக்கு தென்கிழக்கே 130 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் 6 மணி நேரத்தில் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும்.

இது மெல்ல மேற்கு- வட மேற்கு திசையில் தெற்கு ஆந்திரா  - வட தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் அண்மையில் மழை பெய்து ஓய்ந்துள்ளது. இந்த நிலையில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 6 மணிநேரத்தில் வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது, அடுத்த 6 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு, வடமேற்கு திசையில் தெற்கு ஆந்திரம், வட தமிழகம்-புதுவையை நோக்கி நகரும். பின்னர் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் என்று குறப்பிடப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக திருவள்ளூா், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூா் ஆகிய மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (நவ.22) இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோன்று, மீனவா்கள் ஆந்திரக் கடலோர பகுதிகளுக்கும், தமிழகம் - புதுச்சேரி கடலோரப் பகுதிகளுக்கும், இலங்கைக் கடல் பகுதிகளுக்கும் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தொடங்கியதன் காரணமாக மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதையொட்டியுள்ள மாவட்டங்களில் கடந்த ஆண்டைக் காட்டிலும் மழைப் பொழிவு அதிகமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், பருவமழைக்கு இடையே தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவானது. இந்த காரணங்களால் தமிழகத்தின் நான்கு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும்.

சென்னையைப் பொருத்தவரை அடுத்த இரு நாள்களுக்கு இடியுடன் கூடிய லேசான மழையோ அல்லது மிதமான மழையோ பெய்யலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திரக் கடலோர பகுதி, தமிழகம் - புதுச்சேரி கடலோரப் பகுதி, இலங்கைக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசும் என்பதால் அங்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com