பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி? அவசியமா?

ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  மின்சார மானியம் பெறுவதற்கு, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியமாகிறது.

News image

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி? அவசியமா?

Updated On :1 பிப்ரவரி 2024, 4:24 pm IST

சென்னை: தமிழகத்தில் உள்ள மின் இணைப்புகளுடன், அந்த இணைப்பு வைத்திருப்பவர்கள் தங்களது ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  மின்சார மானியம் பெறுவதற்கு, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியமாகிறது.

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் சார்பில், ஆதார் எண்ணை இணைக்க மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தில் சிறப்பு வசதி செய்துள்ளது. மேலும், https://adhar.tnebltd.org/adharupload/ என்ற பக்கமும் உருவாக்கப்பட்டுள்ளது.

நேரடியாக மின் கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள், தங்களது ஆதார் அட்டையின் நகலை எடுத்துச் சென்று, மின் கட்டணம் செலுத்தும் போதே ஆதார் நகலைக் கொடுத்து ஆதார் எண்ணையும் இணைத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு அண்மையில் வெளியிட்ட அரசாணையின்படி, மக்கள், 100 யூனிட் மின்சார மானியத்தைப் பெற, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது அவசியம் என்று அறிவித்திருந்தது. அதே வேளையில் ஆதார் எண் இணைக்காதவர்களுக்கு மானியம் நிறுத்தப்படாது என்றும் அறிவித்திருந்தது.

அதாவது மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, யார் யாருக்கு மானியம் சென்றடைகிறது என்பது குறித்த தரவுகளைப் பராமரிக்கவே ஆதார் எண் இணைக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?

ஆதார் எண்ணை இணைக்கும் முன், உங்கள் ஆதார் அட்டை மற்றும் மின் இணைப்பு அட்டை இரண்டும் உங்கள் கையில் இருக்க வேண்டும். மேலும், ஆதார் அட்டையின் புகைப்படமும், கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆதார் அட்டையின் புகைப்படம் சேவை வழங்கும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

Story image

பிறகு, tanged.gov.in பக்கத்தில் சென்று உங்கள் மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்கவும் அல்லது https://adhar.tnebltd.org/adharupload/ என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம்.

Story image

அதில், ப்ளீஸ் கிளிக் ஹியர் டு வியூ தீஷ் ஃபார்மட்ஸ் என்ற வாய்ப்பைப் பயன்படுத்தி, உங்கள் சர்வீஸ் எண், கன்ஸ்யூமர் அல்லது நுகர்வோர் எண் உள்ளிட்டவற்றை உங்கள் மின் கட்டண அட்டையில் எங்கிருக்கின்றன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Story image

பிறகு, உங்கள் மின் இணைப்பு அட்டையில் இருக்கும் விவரங்களைக் கொண்ட மண்டலத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

Story image

மீண்டும் முகப்புப் பக்கத்துக்கு வந்து, உங்கள் சர்வீஸ் கனெக்ஷன் எண்ணைப் பதிவிடுங்கள். பிறகு உங்கள் பதிவு செய்யப்பட்ட செல்லிடப்பேசி எண்ணையும் பதிவிடுங்கள். அதற்கு ஒரு ஓடிபி வரும். அதனை உள்ளிடவும்.

அடுத்த பக்கத்தில், உரிமையாளரின் பெயர், உள்ளிட்ட விவரங்கள் வரும், இணைக்கப் போகும் ஆதார் எண் உரிமையாளருடையதா அல்லது வாடகைதாரரின் ஆதார் எண்ணா என்று விவரம் கேட்கும். அதற்கு சரியான தகவலை அளித்து, உங்கள் ஆதார் எண்ணை இடைவெளி இல்லாமல் பதிவு செய்யவும். பிறகு ஆதார் எண்ணில் இருக்கும் பெயரை பதிவிடவும்.

பிறகு, உங்கள் ஆதார் அட்டையின் புகைப்படத்தை 300கே.பி. என்ற அளவுக்குள் இருக்குமாறு பதிவேற்றம் செய்யவும்.

Story image

பிறகு, இங்கே கொடுத்திருக்கும் தகவல்கள் உண்மையானவை என்று சான்றளித்து சப்மிட் செய்யவும். பிறகு உங்களது ஆதார் எண் சமர்ப்பிக்கப்பட்டது. விரைவில் இணைப்பு உறுதி செய்யப்படும் என்ற தகவல் வரும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.