சூர்யா - ஜோதிகா இணை விரைவில் சேர்ந்து நடிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளில் கவனிக்கப்படும் இணையான சூர்யா - ஜோதிகா காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். பல நட்சத்திரங்கள் மேல் கிசுகிசுப்பு, விவாகரத்து வதந்திகள் எழுந்தாலும் இவர்கள் மீது அப்படி எந்த செய்திகளும் வந்ததில்லை.
காரணம், தனிப்பட்ட வாழ்வுவிலும் சூர்யா மிக நேர்த்தியானவர் என ஜோதிகா அடிக்கடி குறிப்பிடுவார். ஜோதிகா குறித்து சூர்யாவும் பெருமிதமாகப் பேசுவார். சினிமாவைக் கடந்து தனிப்பட்ட வாழ்விலும் இந்த இணை பலருக்கும் முன்மாதிரியாக இருக்கின்றனர். குறிப்பாக, சூர்யா ரசிகர்களுக்கு.
நடிப்பைத் தாண்டி கல்வி தொடர்பான சமூக செயல்பாடுகளிலும் சூர்யா - ஜோதிகா ஒருமித்த கருத்துகளை வைத்திருப்பதால் ரசிகர்களின் நன்மதிப்பைப் பெற்றவர்களாகவும் உள்ளனர். நீட் தேர்வை முறைப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கைக்காக தில்லியில் போராட்டம் நடைபெற்ற போது சூர்யா, ஜோதிகா அதற்கு ஆதரவாக இருந்தனர்.

இவை ஒருபுறம் என்றாலும், சூர்யாவும் ஜோதிகாவும் எப்போது இணைந்து நடிப்பார்கள்? என்கிற கேள்விகளும் அடிக்கடி எழும். இறுதியாக இருவரும் இணைந்து சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் நடித்திருந்தனர். தொடர்ந்து, திருமணத்திற்குப் பின் ஜோதிகா சினிமாவிலிருந்து விலகினார். தற்போது, கடந்த சில ஆண்டுகளாக மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி திரைப்படங்களிலும் நடிக்கிறார்.
இந்த நிலையில், திருமணமாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்ததற்காக சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து பேட்டியொன்று கொடுத்துள்ளனர். விரைவில் வெளியாகவுள்ள இந்தப் பேட்டியில், இருவரும் இணைந்து நடிக்கவுள்ளதையும் குறிப்பிட்டுள்ளனர்.
It has been announced that the Suriya-Jyothika duo will soon be acting together again.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் எனக்கு புதிய அடையாளமாக இருக்கும்: நடிகர் சூர்யா

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் - தெலுங்கிலும் பாடிய சூர்யா!

நடிகர் சூர்யா பாடிய விஸ்வநாத் அண்ட் சன்ஸ் 2-வது பாடலின் புரோமோ!

சூர்யா - 47 திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர்!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview




