'நான் அழகாக இருக்கிறேனா' என்று கேட்டால் அம்மா இப்படி சொல்வார்? ராகுல் பகிர்ந்த ருசிகரம்

நான் சிறுவனாக இருக்கும் போது, என் அம்மா சோனியாவிடம் சென்று 'நான் அழகாக இருக்கிறேனா?' என்று கேட்டால்,
சோனியா - ராகுல்
சோனியா - ராகுல்

புது தில்லி: நான் சிறுவனாக இருக்கும் போது, என் அம்மா சோனியாவிடம் சென்று 'நான் அழகாக இருக்கிறேனா?' என்று கேட்டால், உடனடியாக அவர் 'ரொம்ப சுமாராக' என்று பதிலளிப்பார் என தனது ருசிகர அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

இந்திய ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டிருக்கும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி அளித்த பேட்டியொன்றில், தனது குழந்தைப் பருவ அனுபவத்தைச் சொல்லியிருக்கிறார்.

நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என்று பேட்டியளித்தவர் கூறியதைக் கேட்ட ராகுல், "நான் சிறுவனாக இருக்கும் போது, என் தாயிடம் சென்று, இப்படி கேட்பேன், 'அம்மா நான் மிகவும் அழகாக இருக்கிறேனா?' என்று, அதற்கு உடனே என் அம்மா என்னை திரும்பிப் பார்த்துவிட்டு, 'இல்லை. நீ மிகவும் சுமாராகத்தான் இருக்கிறாய்' என்று சொல்லுவார்".


மேலும் அவர் கூறுகையில், என் அம்மா எப்போதும் இப்படித்தான். என் அம்மா உங்களை உடனடியாக உங்கள் இடத்தில் வைத்துவிடுவார். என் தந்தையும் அப்படித்தான். அவ்வளவு ஏன், என் ஒட்டுமொத்த குடும்பமும் அப்படித்தான். ஏதாவது நாம் ஒன்றைச் சொன்னால், உடனடியாக அவர்கள் நம்மை எங்கே வைக்க வேண்டுமோ, எங்கே இருக்க வேண்டுமோ அங்கே அனுப்பிவிடுவார்கள். அதனால்தான் அவர், நீ மிகவும் சுமாராக இருக்கிறாய் என்று சொல்லுவார். அது என் நினைவில் எப்போதுமே ஒட்டிக்கொண்டது என்று பதிலளித்தார்.

தனது வாழ்முறை குறித்து பகிர்ந்து கொண்ட ராகுல் காந்தி, தனக்குத் தேவையான காலணிகளை நானே சென்று வாங்கிக் கொள்வேன். ஆனால் சில நேரங்களில் எனது தாயும், சகோதரியும் கூட வாங்கித் தருவார்கள்.

சில அரசியல் நண்பர்களும் கூட எனக்கு காலணிகளை பரிசளிப்பார்கள் என்று கூறிய ராகுலிடம், பாஜகவைச் சேர்ந்த நண்பர்கள் யாரேனும் காலணி வாங்கிக் கொடுத்திருக்கிறார்களா என்று கேட்டதற்கு, இல்லை அவர்கள் என் மீது காலணிகளை வீசத்தான் செய்வார்கள் என்று சிரித்தபடி பதிலளிக்க, அதனை திருப்பி வீசியிருக்கிறீர்களா என்று கேட்டதற்கு, எப்போதுமே இல்லை என்று ராகுல் பதிலளித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com