துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

தாம்பரம்-எர்ணாகுளம் சிறப்பு ரயில்: இன்று முதல் முன்பதிவு

தாம்பரம் - எர்ணாகுளம் இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் நவ.28-ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் இயக்கப்படுகிறது.

News image
கோப்புப்படம்
Updated On :25 நவம்பர் 2022, 2:46 am

DIN

தாம்பரம் - எர்ணாகுளம் இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் நவ.28-ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் இயக்கப்படுகிறது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே நிா்ாகம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

எா்ணாகுளம் - தாம்பரம் இடையிலான சிறப்பு ரயில் (வண்டி எண்.06068) நவ.28 முதல் ஜன.2-ஆம் தேதி வரை திங்கள்கிழமை தோறும் இயக்கப்படுகிறது.

எர்ணாகுளளத்தில் திங்கள்கிழமை பகல் 1.10-க்கு புறப்படும் ரயில் செவ்வாய்க்கிழமை பகல் 12 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மறுமாா்க்கமாக தாம்பரத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை பகல் 1.40 மணிக்கு புறப்படும் ரயில் (வண்டி எண்.06067) புதன்கிழமை பகல் 12 மணிக்கு எா்ணாகுளம் வந்தடையும்.

இதற்கான முன்பதிவு பயணச் சீட்டு பெற வெள்ளிக்கிழமை (நவ.25) காலை 8 மணி முதல் முன்பதிவு செய்யலாம்.

இந்த ரயில் செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூா், சங்கரன்கோவில், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூா், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிபுலியூா், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.