கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

ரூபி மனோகரனின் இடைநீக்க உத்தரவுக்கு தடை! - காங்கிரஸ் தலைமை அறிவிப்பு

காங்கிரஸ் கட்சியிலிருந்து எம்எல்ஏ ரூபி மனோகரனை தற்காலிகமாக நீக்கி காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழு மேற்கொண்ட நடவடிக்கைக்கு கட்சித் தலைமை தடை விதித்துள்ளது. 

News image
Updated On :25 நவம்பர் 2022, 5:17 am

காங்கிரஸ் கட்சியிலிருந்து எம்எல்ஏ ரூபி மனோகரனை தற்காலிகமாக நீக்கி காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழு மேற்கொண்ட நடவடிக்கைக்கு கட்சித் தலைமை தடை விதித்துள்ளது. 

கடந்த நவ. 15 ஆம் தேதி சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற மோதலைத் தொடர்ந்து நாங்குநேரி காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரன் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாகத் காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவர் கே.ஆர். ராமசாமி நேற்று அறிவித்தார். 

இந்நிலையில் இந்த ஒழுங்கு நடவடிக்கை முறையற்றதாக இல்லை என்பதாலும் இயற்கை நீதியின் கொள்கைக்கு முரணாக இருப்பதாலும் ரூபி மனோகரனின் நீக்கத்திற்கு தடை விதிக்கப்படுவதாக தமிழக மாநில பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

மேலும், தமிழக காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின்  செயல்பாடு நிறுத்தி வைக்கப்படுவதாகவும் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.