திமுக மாணவர் அணி தலைவர், செயலர் நியமனம்

திமுக சட்ட திட்டம் விதி 18, 19-ன் படி மாநில மாணவர் அணித் தலைவராக ரா. ராஜீவ் காந்தி நியமிக்கப்படுகிறார்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

திமுக மாணவரணி தலைவராக ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராஜீவ் காந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக சட்ட திட்டம் விதி 18, 19-ன் படி மாநில மாணவர் அணித் தலைவராக ரா. ராஜீவ் காந்தி நியமிக்கப்படுகிறார்.

மாணவரணி செயலாளராக சிவிஎம்பி. எழிலரசன், மாணவரணி இணை செயலாளர்களாக சென்னையைச் சேர்ந்த பூவை சி. ஜெரல்டு, எஸ்.மோகன் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

மாணவரணி துணைச் செயலாளர்களாக சோழராஜன், தமிழரசன், பூர்ண சங்கீதா, கோகுல், பி.எம். ஆனந்த், பி. செந்தில் குமார், ஜெ.வீரமணி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com