பொது சுகாதாரம் 100 ஆண்டுகள் நிறைவு: செய்யாற்றில் மினி மாரத்தான் போட்டி!

தமிழகத்தில் பொது சுகாதாரம் தொடக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவானாதை முன்னிட்டு செய்யாறு சுகாதார மாவட்டம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
பொது சுகாதாரம் 100 ஆண்டுகள் நிறைவு: செய்யாற்றில் மினி மாரத்தான் போட்டி!

தமிழகத்தில் பொது சுகாதாரம் தொடக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவானாதை முன்னிட்டு செய்யாறு சுகாதார மாவட்டம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியினை  எம்.எல்.ஏ. ஓ.ஜோதி  துவக்கி வைத்து பங்கேற்றார்.

திருவண்ணாமலை மாவட்டம்  செய்யாறு பொது சுகாதாரம் மாவட்டம் சார்பில் செய்யாற்றில், நூற்றாண்டு விழாவை முன்னிட்டு  மினி மாரத்தான்  ஓட்டப் பந்தய போட்டி நடைபெற்றது.

செய்யாறு ஞானமுருகன் பூண்டி கோயில் அருகே தொடங்கி  செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரி வரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. செய்யாறு ஞானமுருகன் பூண்டி கோயில் அருகே தொடங்கிய மினி மாரத்தான் போட்டிக்கு செய்யாறு சுகாதார மாவட்ட துணை இயக்குனர் சதீஷ்குமார் தலைமைத் தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், திருவத்திபுரம் நகர மன்ற தலைவர்  ஆ.மோகனவேல், வெம்பாக்கம் ஒன்றிய குழு தலைவர்  டி.ராஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு விருந்தினராக செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ. ஓ.ஜோதி பங்கேற்று மினி மாராத்தான் போட்டியை கொடி அசைத்து தொடங்கி வைத்தத்தடன், போட்டியில்  இறுதி வரையில் பங்கேற்று சிறப்பித்தார்.

மினி மாராத்தான் போட்டியில் பங்கேற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கு  தங்க நாணயம் பரிசாகவும், அடுத்து வந்த முதல் 15 பேருக்கு ஊக்கத் தொகையாக தலா ரூ.500  வீதம்  பரிசு மற்றும் சான்றிதழியை எம்.எல்.ஏ வழங்கினார். 

இந்நிகழ்வில்  திமுக ஒன்றிய செயலாளர்கள் வெம்பாக்கம்  ஜேசிகே. சீனிவாசன், செய்யாறு ஏ. ஞானவேல், பொது சுகாதாரத் துறை பணியாளர்கள் மற்றும்  உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள், போட்டியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com