கேள்விதான் மனித வளர்ச்சிக்கு அடிப்படை: ஸ்டாலின் 

ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்விதான் மனித இனம் அடைந்துள்ள வளர்ச்சிக்கெல்லாம் அடிப்படை என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கேள்விதான் மனித வளர்ச்சிக்கு அடிப்படை: ஸ்டாலின் 
கேள்விதான் மனித வளர்ச்சிக்கு அடிப்படை: ஸ்டாலின் 
Published on
Updated on
1 min read


ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்விதான் மனித இனம் அடைந்துள்ள வளர்ச்சிக்கெல்லாம் அடிப்படை என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வானவில் மன்றம் என்ற சிறப்புத் திட்டத்தைத் தொடக்கி வைத்திருப்பது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

அதில், ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்விதான் மனித இனம் அடைந்துள்ள வளர்ச்சிக்கெல்லாம் அடிப்படை! பகுத்தறிவைப் பள்ளிப்பருவத்திலேயே ஊட்டி, நம் சிறார்கள் மனதில் ஆராய்ச்சி விதையை ஊன்றும் 'வானவில் மன்றம்'; அரசுப்பள்ளி மாணவர்களுக்கான அரிய வாய்ப்பு! கற்றல் இனிமையாகட்டும்! கல்வி முழுமையாகட்டும்! என்று தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி மாவட்டம், காட்டூர் - பாப்பாக்குறிச்சி அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், அரசுப் பள்ளி மாணவர்களின் அறிவியல் மற்றும் கணித ஆர்வத்தைத் தூண்டும் “வானவில் மன்றம்” தொடங்கி வைத்து, 100 நடமாடும் அறிவியல் மற்றும் கணித ஆய்வக வாகனங்களைக் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பள்ளிக்கல்வித் துறையின் 2022-23ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் அறிவியல், கணித ஆர்வத்தைத் தூண்டும் வகையில் நடமாடும் அறிவியல் மற்றும் கணித ஆய்வகங்கள் மூலம் மாதந்தோறும் அறிவியல் பரிசோதனைகள் மற்றும் கணிதத்தை உரிய வழிகாட்டுதலுடன் மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுவதுடன், மாணவர்களே உருவாக்கிய அறிவியல் கருவிகளும் காட்சிப்படுத்தப்படும். 25 இலட்சம் அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் ரூ.25 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பிற்கிணங்க, அரசுப் பள்ளி மாணவர்களின் அறிவியல் மற்றும் கணித ஆர்வத்தைத் தூண்டும் வானவில் மன்றத்தை தமிழக முதல்வர்  ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். 

பின்னர், காட்டூர் - பாப்பாக்குறிச்சி, அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளி வகுப்பறையில் ஆசிரியர்களின் வழிகாட்டுதலின்படி மாணவர்கள் மேற்கொண்ட அறிவியல் பரிசோதனைகளை பார்வையிட்டார். மேலும்,  அப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் கலந்துரையாடினார் முதல்வர் ஸ்டாலின்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com