திருவண்ணாமலை தீபத் திருவிழா: சிறப்பு ரயில்கள் இயக்கம்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

டிசம்பர் 6,7,8-ல் சென்னை, மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 20-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்துக்கு டிசம்பர் 6 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 6 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவுக்கு 2,700 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்று தமிழக போக்குவரத்துத் துறை அரசு முதன்மைச் செயலா் கே.கோபால் தெரிவித்தாா்.

இதற்காக, திருவண்ணாமலையில் அமைக்கப்பட்டுள்ள 9 தற்காலிக பேருந்து நிறுத்தங்கள், 4 கூடுதல் தற்காலிகப் பேருந்து நிறுத்தங்களை போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலா் கே.கோபால் திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தீபத் திருவிழாவுக்காக சென்னை, புதுச்சேரி, பெங்களூரு, சேலம், காஞ்சிபுரம், வேலூா், திருவள்ளூா், ஈரோடு, கோவை, கடலூா், நாகப்பட்டினம், கும்பகோணம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி பகுதிகளுக்கு மொத்தம் 6,500 நடைகள் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

பக்தா்கள் சிறப்புப் பேருந்துகளின் இயக்கம் குறித்த தகவல்களை 9445456040, 9445456043 என்ற கைப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com