'ஒரு காற்றழுத்தம் வலுவிழந்தால் அனைத்தும் அப்படியே ஆகாது'

அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5ஆம்தேதி ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
'ஒரு காற்றழுத்தம் வலுவிழந்தால் அனைத்தும் அப்படியே ஆகாது'
'ஒரு காற்றழுத்தம் வலுவிழந்தால் அனைத்தும் அப்படியே ஆகாது'


அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5ஆம்தேதி ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுவிழந்து, எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு மழையும் பொழியாமல் போனது. பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில் மழை பெய்யாததால், அனைத்து எச்சரிக்கைகளும் திரும்பப்பெறப்பட்டன.

இந்த நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் இன்று பதிவிட்டிருப்பதாவது, டிசம்பர் 5ஆம் தேதி உருவாகும் காற்றழுத்தத் தாழ்வு நிலை, டிசம்பர் இரண்டாவது வாரத்தில், தமிழகத்தை நோக்கி நகரலாம். அதன் பாதை மற்றும் தீவிரமடைவது தொடர்பான தகவல்கள் மேலும் தேவைப்படுகின்றன. இது அதிக மழைப்பொழிவை ஏற்படுத்துமா அல்லது புயலாக மாறுமா என்பது என்று கணிக்கப்பட வேண்டும்.

ஒரே ஒரு காற்றழுத்தத் தாழ்வு வலுவிழந்து போனதால், அடுத்து வரும் அனைத்தும் அப்படியே மழை இல்லாமல் போய்விடும் என்று கூற முடியாது. டிசம்பர் மாதம் என்றாலே பனி இருக்கும். வர்தா மற்றும் வரலாற்றில் இடம்பெற்ற புயல்களின்போதும் அப்படித்தான் இருந்தது. வடகிழக்கு பருவமழையின் இடைவேளையில், பனிமூட்டம் என்பது சகஜம்தான். இன்னும் சரியாக 10 நாள்கள் இருக்கின்றன. இந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை குறித்து கணிக்கலாம்.

மிக முக்கியமான எம்ஜிஓ தற்போது நமது கடற்கரைக்கு அருகே வந்துள்ளது. கடந்த காற்றழுத்தத் தாழ்வு போல இது இல்லாமல் பலமானதாக இருக்கும் வாய்ப்பு இதனால் அதிகரிக்கிறது. பருவமழை தீவிரமடையும் 2வது மற்றும் 3வது வாரங்களை எதிர்பார்க்கலாம் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், காற்றழுத்தம் எனப்படும் சக்கரமானது டிசம்பர் 8 - 12ஆம் தேதிகளில் (இந்திய தயாரிப்பாக இருந்தால்) கரை கடக்கும். ஒருவேளை கடலிலேயே செத்துவிட்டால் (சீன தயாரிப்பு) மழை மட்டுமே கிடைக்கும். ஒரு வேளை புயலாக மாறினால் பல கேள்விகள் எழுகின்றன. நிறைய நாள்கள் இருக்கிறது. எம்ஜிஒ இருப்பதால் முந்தைய நவம்பர் 20 - 25 காற்றழுத்தம் போல இருக்காது, இது நிச்சயம் செயலிடப்படும். மேலதிகத்தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன என்றும் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com