சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

திருவள்ளுவரை ஆன்மிகவாதியாக நம்புகிறார்கள்: தமிழிசை சௌந்தரராஜன்

திருவள்ளுவரை ஆன்மிகவாதியாக நம்புகிறார்கள் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

News image

கோப்புப் படம்.

Updated On :9 அக்டோபர் 2022, 8:57 am

DIN

திருவள்ளுவரை ஆன்மிகவாதியாக நம்புகிறார்கள் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, தலைவர் அண்ணன், துணைப் பொதுச்செயலாளர் தங்கை என வாரிசு அரசியலை நோக்கி திமுக செல்வதாக மக்கள் நினைக்கின்றனர். 

ஒரு பெண் பதவிக்கு வருவது சிரமம், திமுக துணைப் பொதுச்செயலாளரான கனிமொழிக்கு எனது வாழ்த்துகள். திருவள்ளுவரை ஆன்மிகவாதியாக நம்புகிறார்கள். அவர் அவ்வாறு வருவகப்படுத்தப்பட்டு இருக்கிறார். 

மறைக்கப்பட்ட வரலாறை மீட்டெடுக்க ஆளுநர் ரவி அப்படி பேசி இருக்கலாம். ராஜராஜசோழன் வரலாறும் மறைக்கப்பட்டு வருகிறது. ஆளுநர் ரவி ஒரு நோக்கத்துடன் திருக்குறளை படிக்கிறார்.

அது பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார். இவ்வாறு அவர தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.