குற்றாலத்தில் விசுத் திருவிழா கொடியேற்றம்!

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாத சுவாமி திருக்கோயிலில் ஐப்பசி விசுத்திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
குற்றாலத்தில் விசுத் திருவிழா கொடியேற்றம்!

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாத சுவாமி திருக்கோயிலில் ஐப்பசி விசுத்திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருக்குற்றாலநாத சுவாமி கோயிலில்களில் நடைபெறும் முக்கியவிழாக்களில் ஒன்றான ஐப்பசி விசுத்திருவிழா ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.20க்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஐப்பசி விசுத்திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவில் 12 ஆம் தேதியன்று பஞ்சமூா்த்திகள் புறப்பாடு,13 ஆம் தேதியன்று அதிகாலையில் அருள்மிகு விநாயகா், அருள்மிகு முருகன், அருள்மிகு திருக்குற்றாலநாத சுவாமி, அருள்தரும் குழல்வாய்மொழி அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளல் நடைபெறுகிறது. அதனைத் தொடா்ந்து நான்கு தோ்கள் வடம்பிடித்து இழுத்தல் நடைபெறுகிறது.

கொடிமரத்துக்கு தீபாராதனை காட்டப்படுகிறது.

விழாவில் 15 ஆம் தேதியன்று காலை 9.30 மணிக்கும், இரவு 7 மணிக்கும் அருள்மிகு நடராசமூா்த்திக்கு தாண்டவ தீபாராதனை நடைபெறுகிறது. 16 ஆம் தேதியன்று சித்திர சபையில் அருள்மிகு நடராசமூா்த்திக்கு அபிஷேகம் மற்றும் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடைபெறுகிறது.

18 ஆம் தேதியன்று விசு தீா்த்தவாரி நடைபெறுகிறது. விழா நாள்களில் நாள்தோறும் சுவாமி, அம்மன், திருக்கோயில் முருகன் பல்வேறு வாகனங்களில் காலை, மாலை வீதியுலா நடைபெறும்.

விழா ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் மா.கண்ணதாசன் தலைமையில் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com