தென்மாவட்டங்களுக்கான புதிய பேருந்து நிலையம்: 2023 பிப்ரவரியில் திறப்பு!

2023 பிப்ரவரியில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில்  புதிய பேருந்து நிலையம் திறக்கப்படும் என்று அமைச்சர் முத்துசாமி  தெரிவித்துள்ளார்.
தென்மாவட்டங்களுக்கான புதிய பேருந்து நிலையம்: 2023 பிப்ரவரியில் திறப்பு!

2023 பிப்ரவரியில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில்  புதிய பேருந்து நிலையம் திறக்கப்படும் என்று அமைச்சர் முத்துசாமி  தெரிவித்துள்ளார்.

ரூ.400 கோடி செலவில் கிளாம்பாக்கத்தில் பேருந்து முனைய கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. கோயம்பேட்டில் நெரிசல் அதிகரித்ததால் கிளாம்பாக்கத்தில் மிகப்பெரிய பேருந்து முனையம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ரூ.400 கோடியில் கட்டப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய பேருந்து நிலையமாக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளது. தமிழகத்தின் அனைத்து இடங்களுக்கு இங்கிருந்துதான் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால், சென்னையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

குறிப்பாக பண்டிகை நாள்களுக்கு முன்பு, கடும் வாகன நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க முடியாமல் இருக்கிறது. இதனைத் தவிர்க்க தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்காக வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com