கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

பிசிசிஐ தலைவராகும் ரோஜர் பின்னி: நடந்தது என்ன?

கங்குலிக்கு அடுத்ததாக பிசிசிஐயின் புதிய தலைவராக முன்னாள் வீரர் ரோஜர் பின்னி தேர்வாகவுள்ளார். 

Published On :

கங்குலிக்கு அடுத்ததாக பிசிசிஐயின் புதிய தலைவராக முன்னாள் வீரர் ரோஜர் பின்னி தேர்வாகவுள்ளார். 

2019 அக்டோபரில் பிசிசிஐ தலைவராக முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலியும் செயலாளராக ஜெய் ஷாவும் தேர்வானார்கள். சமீபத்தில் பிசிசிஐ விதிமுறைகளில் திருத்தம் மேற்கொள்ள பிசிசிஐக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன்படி கங்குலி, ஜெய் ஷா ஆகிய இருவரும் தங்களுடைய பதவிகளில் மேலும் மூன்று வருட காலம் பணியாற்ற சந்தர்ப்பம் ஏற்பட்டது. எனினும் பிசிசிஐயின் தலைமைப் பொறுப்புகளில் பல மாற்றங்கள் ஏற்படவுள்ளன. 

பிசிசிஐயில் விரைவில் நடைபெறவுள்ள தேர்தலில் தலைவர் பதவிக்கு கர்நாடகத்தைச் சேர்ந்த முன்னாள் வீரர் ரோஜர் பின்னி (67) போட்டியிடவுள்ளார். இதற்காக இன்று மனுத்தாக்கல் செய்யவுள்ளார். இதையடுத்து அக்டோபர் 18-ல் நடைபெறவுள்ள வருடாந்திர பொதுக்குழுவில் பிசிசிஐயின் புதிய தலைவராக ரோஜர் பின்னி தேர்வாகவுள்ளார். பொருளாளர் பதவிக்கு பாஜகவைச் சேர்ந்த ஆஷிஷ் ஷெலார் போட்டியிடவுள்ளார். இன்றும் நாளையும் பிசிசிஐ பதவிகளுக்கு மனுத்தாக்கல் செய்பவர்கள் போட்டியின்றி தேர்வாகவே அதிக வாய்ப்புள்ளது. ஐபிஎல் தலைவராக உள்ள பிரிஜேஷ் படேல், விரைவில் 70 வயதை அடையவுள்ளதால் அவரால் அப்பதவியில் தொடர முடியாது. அப்பதவிக்கு அருண் துமால் போட்டியிடவுள்ளார். 

திங்களன்று அனைத்து மாநில கிரிக்கெட் சங்கங்களின் தலைவர்களுடனான கூட்டத்தை நடத்தியுள்ளது பிசிசிஐ. ஐந்து முக்கியமான பதவிகளில் போட்டியிடுபவர்கள் குறித்த விவாதம் இந்தக் கூட்டத்தில் நடைபெற்றது. பிசிசிஐ தேர்தல் அக்டோபர் 18 அன்று நடைபெறவுள்ளது. 

2019 முதல் கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக உள்ள பின்னி, பிசிசிஐயின் தேர்வுக்குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். 1983-ல் ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் பின்னியும் இடம்பெற்றிருந்தார். அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்கிற பெருமையை அப்போட்டியில் அடைந்தார். இந்திய அணிக்காக 27 டெஸ்டுகள், 72 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

ராஜீவ் சுக்லா துணைத் தலைவர் பதவியையும் ஜெய் ஷா செயலாளர் பதவியையும் தக்கவைத்துக்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. 

பிசிசிஐயின் முக்கியமான பதவிகளுக்குப் போட்டியிடுபவர்கள்

தலைவர்: ரோஜர் பின்னி
துணைத் தலைவர்: ராஜீவ் சுக்லா
செயலாளர்: ஜெய் ஷா
இணை செயலாளர்: தேவஜித் சைகியா
பொருளாளர்: ஆஷிஷ் ஷெலார்
ஐபிஎல் தலைவர்: அருண் துமால் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.