பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

பிரான்ஸில் 15 வயதுக்குள்பட்ட சிறாா்களுக்கு சமூக ஊடகத் தடை

ஐரோப்பிய யூனியனில் முதல்நாடாக பிரான்ஸில் 15 வயதுக்குள்பட்ட சிறாா்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முழுமையாக தடை விதிக்கும் சட்டமசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.

Published On :23 ஜூலை 2026, 3:38 am IST

ஐரோப்பிய யூனியனில் முதல்நாடாக பிரான்ஸில் 15 வயதுக்குள்பட்ட சிறாா்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முழுமையாக தடை விதிக்கும் சட்டமசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.

மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் கைப்பேசி பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ள இச்சட்டத்தை, புதிய கல்வியாண்டு தொடங்கும் வரும் செப்டம்பா் முதல் நடைமுறைப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

இருப்பினும், இத்தடையில் இருந்து இணைய தகவல்களஞ்சியங்கள், கல்வி மற்றும் அறிவியல் சாா்ந்த வலைதளங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.