மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

‘லீவ் விடுங்க மேம் ப்ளீஸ்..’: புதுகை ஆட்சியரிடம் இன்ஸ்டாவில் கெஞ்சிய மாணவர்கள்!

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையால், இன்ஸ்டாகிராமில் மாணவர்கள் அனுப்பிய மெசேஜால் நனைந்துள்ளார் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு.

Published On :

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையால், இன்ஸ்டாகிராமில் மாணவர்கள் அனுப்பிய மெசேஜால் நனைந்துள்ளார் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருப்பவர் கவிதா ராமு. ஆட்சி நிர்வாகப் பணியுடன் நடனத்திலும் சமூக ஊடகங்களிலும் தீவிரமாக இயங்குபவர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆட்சியரின் இன்ஸ்டாகிராம் கணக்கின் நேரடி தகவல் (டிஎம்) வழி வந்த மாணவர்கள் திங்கள்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடக் கோரியுள்ளனர். இதற்கான ஸ்கிரீன்ஷாட்களை இன்று தனது முகநூலில் பகிர்ந்துள்ளார் கவிதா ராமு.

'கலெக்டர் அம்மா', 'உங்களின் முடிவில் தான் எங்களின் சந்தோஷம் இருக்கு', 'ப்ளீஸ் ப்ளீஸ்', 'செல்லம்', ‘கோயில் கட்டுறேன்’... என மாணவர்கள் பலரும் தங்களின் விண்ணப்பங்களை இன்ஸ்டா வழியே அனுப்பியிருக்கின்றனர்.

Story image

ஆட்சியரின் முகநூல் பதிவு தற்போது வேகமாகப் பலராலும் பகிரப்பட்டும் வருகிறது.

Story image

இதற்கிடையே, குறிப்பிட்ட அந்த திங்கள்கிழமை (அக். 10) புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டதும், விடுமுறை விடும்போது மழை ஓடிப்போய்விடும் என்பது போல அன்றைக்கு மழை பெய்யாமல் வெயில் அடித்ததும் குறிப்பிடத்தக்கது.

Story image

மழை வந்தால் விடுமுறை விடப்படுமா என தொலைக்காட்சியின் முன் அமர்ந்து கிடந்த காலம் கடந்து, நேரடியாக மாவட்ட ஆட்சியரிடமே கோரிக்கை விடுக்கும் அளவிற்கு மாணவர்கள் சமூகம் வளர்ந்துவிட்டது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.