
சத்தியமங்கலத்தில் தாயின் தலையில் கல்லை போட்டு 14 வயது சிறுவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தனது மகன் சரியாக படிக்காததால் விடுதியில் சேர்க்க தாய் யுவராணி திட்டமிட்டிருந்தார். விடுதியில் சேர விருப்பமில்லாத 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் தாயுடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று இரவு அனைவரும் தூக்கச் சென்ற பிறகு, ஹாலோ பிளாக் கல்லை எடுத்து தாயின் தலையில் மகன் போட்டுள்ளார்.
இதையும் படிக்க | ஹரியாணா ஆலையில் மருந்து உற்பத்தியை நிறுத்த உத்தரவு
இதில், பலத்த காயமடைந்த தாய் யுவராணி உயிரிழந்தார். தாயை கொன்ற சிறுவனிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாயை மகனே கல்லை போட்டு கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.