நாட்டின் 5-வது வந்தே பாரத் ரயில் சென்னை - மைசூரு இடையே வருகிற நவம்பர் 10 ஆம் தேதி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் அதிவேக ரயிலான வந்தே பாரத் விரைவு ரயில் சுமாா் 160 கி.மீ. வேகத்தில் பயணிக்க கூடியது. இந்த ரயில் சேவை கடந்த 2019-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
ஏற்கெனவே 3 வந்தே பாரத் ரயில்களின் சேவை தொடங்கிவைக்கப்பட்டுள்ள நிலையில், ஹிமாச்சல பிரதேச மாநிலம் உனா ரயில் நிலையத்தில் இருந்து தில்லி செல்லும் 4-ஆவது வந்தே பாரத் ரயில் சேவையை கடந்த வியாழக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடக்கிவைத்தார்.
இதையடுத்து, நாட்டின் 5-வது வந்தே பாரத் ரயில் சென்னை - மைசூரு இடையே வருகிற நவம்பர் 10 ஆம் தேதி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையும் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைக்கவிருக்கிறார்.
சென்னையிலிருந்து புறப்படும் இந்த ரயில் பெங்களூரு வழியாக மைசூரு சென்றடையும். இதன் மூலமாக, சென்னையில் முதல்முறையாக வந்தே பாரத் ரயில் இயக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | '323 பொறியியல் கல்லூரிகளில் 10% இடங்கள் கூட நிரப்பப்படவில்லை'
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
விளையாட்டுச் செய்திகள் சில வரிகளில்...

அமைதிக்கான அச்சாரம்!

சேலம், எடப்பாடியில் திமுக கூட்டணி கட்சியினா் ஆா்ப்பாட்டம்
சீன கிராண்ட் ப்ரீ: ஆன்டனெலி முதலிடம்!
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

