ராணிப்பேட்டை புத்தகக் கண்காட்சியில் 2 நாளில்  ரூ.3 லட்சத்திற்கு புத்தகங்கள் விற்பனை!

ராணிப்பேட்டை புத்தகக் கண்காட்சியில் 2 ஆவது நாளில் ரூ.3 லட்சத்திற்கு புத்தகங்கள்  விற்பனையாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை புத்தகக் கண்காட்சியில் 2 நாளில்  ரூ.3 லட்சத்திற்கு புத்தகங்கள் விற்பனை!

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை புத்தகக் கண்காட்சியில் 2 ஆவது நாளில் ரூ.3 லட்சத்திற்கு புத்தகங்கள்  விற்பனையாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்திருப்பதாவது:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள், இளைஞர்கள், தனியார், அரசு பள்ளி, கல்லூரி, மாணவ-மாணவிகள், புத்தக வாசிப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் வருகை தந்து புத்தகக் கண்காட்சியில் குறைந்த விலையில் நல்ல சிறப்பான புத்தகங்களை வாங்கி செல்ல வருகை புரிய வேண்டும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜா அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை கல்லூரியில் மாவட்டத்தின் முதலாவது மாபெரும் புத்தகக் காட்சி திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை 14 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இக்கண்காட்சியில் 40-க்கும் மேற்பட்ட புத்தக விற்பனை அரங்குகள் விற்பனைக்காக அமைக்கப்பட்டுள்ளது. கண்காட்சியில் சிறிய குழந்தைகள் முதல் வாசிப்பாளர்கள் வரை அவர்களுக்கு தேவையான அனைத்து வகையான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

மிகப்பெரிய எழுத்தாளர்கள் எழுதிய பல்வேறு வகையான புத்தகங்கள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இக்கண்காட்சியில் இதுவரையில் 45 ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள், பொதுமக்கள் மற்றும் புத்தக ஆர்வலர்கள் வருகை தந்து பார்வையிட்டு புத்தகங்களை வாங்கி சென்றுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த அக்டோபர் 14,15 ஆகிய இரண்டு நாளில் மட்டும் புத்தகக் கண்காட்சியில் ரூ.3,37,932 மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மேலும், நாள்தோறும் பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், நாட்டுப்புற கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், கவியரங்கங்கள் நடைபெற்று வருகின்றது. இதனை பொதுமக்கள், குழந்தைகள், மாணவ, மாணவிகள் கண்டுகளித்து செல்கின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தின் முதலாவது புத்தகக் கண்காட்சியினை மாவட்டத்தில் உள்ள பொதுமக்களும், மாணவ, மாணவிகளும், உள்ளாட்சித் துறை பிரதிநிதிகள் உள்ளிட்டோர் தங்கள் பகுதிகளில் உள்ள நூலகங்களுக்கு நூல்களை வாங்கித் தர இந்த கண்காட்சியை பயன்படுத்திக் கொண்டு ஏராளமான அறிவு சார்ந்த புத்தகங்களை வாங்கி பயன்பெற வேண்டும். 

இந்த புத்தகக் காட்சி திருவிழா வரும் அக்டோபர் 23  ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற உள்ள  நிலையில், நாள்தோறும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை கண்காட்சி அரங்குகள் விற்பனைக்காக திறக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com