புதுச்சேரியில் அரிசி-சர்க்கரைக்கு பதில் பணம்: முதல்வர் அறிவிப்பு

புதுச்சேரி மாநிலத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி அரிசி-சர்க்கரைக்கு பதில் பணமாக பொதுமக்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். 
முன்னாள் முதல்வர் ரங்கசாமி
முன்னாள் முதல்வர் ரங்கசாமி


புதுச்சேரி:  புதுச்சேரி மாநிலத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி அரிசி-சர்க்கரைக்கு பதில் பணமாக பொதுமக்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். 

தீபாவளி பண்டிகை வரும் 24 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், பொதுமக்கள் புது ஆடைகள், சீர் வரிசை பொருள்கள் வாங்குவதற்கு ஆர்வமுடன் கடைகளில் குவிந்து வருகின்றனர். 

பாப்ஸ்கோ நிறுவனம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல் பண்டிகையையொட்டி, மக்களுக்கு சிறப்பு அங்காடியை திறந்து மளிகை பொருள்கள் மற்றும் பட்டாசுகள் சிறப்பு தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த ஆண்டு சுமார் ரூ.11 கோடி அளவுக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு ரூ.12 கோடி அளவுக்கு விற்பனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டும் மலிவு விலையில் சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட 25 பொருள்கள் கொண்ட தொகுப்பு ரூ.800-க்கு வழங்கப்படுகிறது. 

இந்நிலையில், புதுச்சேரியில் பாப்ஸ்கோ தீபாவளி சிறப்பங்காடியை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார். 

பின்னர் அவர் பேசுகையில்,  தீபாவளி பண்டிகையையொட்டி, நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு வழங்கப்படும் 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரைக்கு பதில் அதற்கு உண்டான பணம் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும். 

மக்களின் குறைகளை கேட்டு அதனை தீர்த்து வைக்க வேண்டும் என்துதான் அரசின் எண்ணம். அதன்படி மக்களின் குறைகளுக்கு தீர்வுகள் காணப்பட்டு வருகிறது என முதல்வர் ரங்கசாமி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com